அக்னிபாத் திட்டம் ஒரு சிறந்த திட்டம் என ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நம் ராணுவத்தில், 'அக்னி வீரர்'கள் என்ற புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிபத் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு, 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்குப் பின், 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவர். இத்திட்டத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த திட்டம் மிகச் சிறந்தது என ராணுவ வீரர்கள் தரப்பில் கருத்து நிலவுகிறது.. இது குறித்து ராணுவ வீரர் ஒருவர் கூறியது, அக்னிபாத் திட்டம் என்பது நாட்டை காக்கும் இளைஞர்களுக்கு மட்டும் தான் இந்த திட்டமே தவிர தேச துரோகிகளுக்கு இல்லை.
21 வயது முடிந்தவர்கள் ராணுவத்தில் சேர முடியாதா எனது கல்வி தகுதி பாதிக்கப்படதா கேட்கின்றனர். 21 பூர்த்தியடைந்த பட்டபடிப்பு முடித்தவர்கள் ராணுவத்திற்கு மத்திய அரசு அழைக்கிறது. இவர்களுக்கு தான் நாட்டை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்தவர்கள் நான்கு வருடங்களுக்கு பின் தங்களது சொந்த மாநில காவல்த்துறையில் பணியமர்த்தப்படுவர். எனவே அக்னிபாத் திட்டம் ஒரு சிறந்த திட்டம் .
இத்திட்டத்தினை பற்றிய புரிதல் இல்லாதவர்கள் தான் தேவையில்லாமல் வன்முறையை தூண்டிவிடுகின்றனர். இத்திட்டத்தில் அரசியலையோ, மதத்தையோ கொண்டு வந்து நாட்டை யாரும் பிளவு படுத்தாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அக்னிபாத் சிறப்பம்சங்கள்:
வேலைவாய்ப்பு உறுதி:
* மத்திய ஆயுதபடை பிரிவு மற்றும் மாநில காவல்துறையில் முன்னுரிமை.
* இந்த திட்டம் ஏற்கனவே பெரும்பான்மை நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இது இளமையான செயல்திறன் மிக்க ராணுவதத்தை உண்டாக்கும் முறை என்று உலக அளவில் நிரூபிக்கப்பட்டது.
* அக்னிவீரர்கள் தொழில் தொடங்க நிதி தொகுப்பு மற்றும் வங்கி கடன் கிடைக்கும்.
*முதல் ஆண்டில் அக்னி வீரர்களின் எண்ணிக்கை ஆயுதப்படைகளில் 3 சதவீதம் மட்டுமே இருக்கும்.
* 12-ம் வகுப்புக்கு சமமான சான்றிதழ் மற்றும் மேல் படிப்புக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.
* கடந்த இரண்டு ஆண்டுகளாகபணியில் இருக்கும் ஆயுதப்படை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைக்கு பிறகே முடிவு செய்யப்பட்டு உள்ளது.