வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி-'கோர்டிலியா குரூஸ்' சொகுசு கப்பல் ௩வது முறை யாக புதுச்சேரியில் முகா மிட்டு திரும்பி சென்றது.
![]()
|
சென்னை - விசாகப்பட்டினம் - புதுச்சேரி இடையிலான 'கோர்டிலியா குரூஸ்' என்ற தனியார் சொகுசு கப்பல் பயணத்தை, கடந்த 4ம் தேதி, சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து, சொகுசு கப்பல் கடந்த 10ம் தேதி புதுச்சேரிக்கு வந்தது. கப்பலில் சூதாட்ட விடுதி இருப்பதாக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், புதுச்சேரியில் கப்பலை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு, புதுச்சேரி அரசு அனுமதி வழங்கவில்லை.
![]()
|
இதனால், 4 மணி நேரம் முகாமிட்டு இருந்த கப்பல் திரும்பி சென்றது.தொடர்ந்து, கடந்த 11ம் தேதி, இரண்டாவது முறையாக புதுச்சேரி கடல் பகுதிக்கு கோர்டிலியா கப்பல் வந்தது. அப்போதும் அனுமதி தரப்படாததால் திரும்பி சென்றது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5:00 மணியளவில், மூன்றாவது முறையாக சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வந்தது. ஒரு மணி நேரம் முகாமிட்டு இருந்த கப்பல், மீண்டும் ஆழ்கடலுக்கு புறப்பட்டு சென்றது.