10 சதவீதம் குறைந்தது பருத்தி விலை: நூல் விலையிலும், நுகர்விலும் சரிவு

Updated : ஜூன் 18, 2022 | Added : ஜூன் 18, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கோவை: "பருத்தி விலை குறைவதை தொடர்ந்து, நுால் விலையும் குறைந்துள்ளது; பருத்தி இறக்குமதி தொடங்கும்போது, மேலும் குறைய வாய்ப்பு உள்ளது," என, தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் தெரிவித்தார்.கோவையில் சைமா தலைவர் ரவிசாம், துணைத்தலைவர் சுந்தர்ராமன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை குறைத்ததை தொடர்ந்து,


கோவை: "பருத்தி விலை குறைவதை தொடர்ந்து, நுால் விலையும் குறைந்துள்ளது; பருத்தி இறக்குமதி தொடங்கும்போது, மேலும் குறைய வாய்ப்பு உள்ளது," என, தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் தெரிவித்தார்.



latest tamil news




கோவையில் சைமா தலைவர் ரவிசாம், துணைத்தலைவர் சுந்தர்ராமன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை குறைத்ததை தொடர்ந்து, உள்நாட்டிலும் பருத்தியின் விலை குறையத்தொடங்கியுள்ளது. கண்டி (355 கிலோ) 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. நுால் விலையும் கிலோ ஒன்றுக்கு, 22 முதல் 30 ரூபாய் வரை நுாலின் ரகத்தை பொறுத்து குறைந்துள்ளது.

பருத்தி இறக்குமதி அதிகரிக்கும்போது, மேலும் இது குறைய வாய்ப்பு உள்ளது. விலை குறைந்தபோதிலும், நுால் நுகர்வும் 30 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. தேவையான அளவிற்கு மில்களில் நுால் கையிருப்பு உள்ளதுடன், தேக்க நிலையும் ஏற்பட்டுள்ளது. பருத்தியை பொறுத்தவரை, விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலையாக கண்டி ஒன்றுக்கு, 45 ஆயிரம் ரூபாயாக அரசு நிர்ணயித்துள்ளது.

பருத்தியின் விலை ரூ.91 ஆயிரமாக இருப்பதால், விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பருத்தி விலை அதிகரித்ததால், தமிழ்நாட்டிலும் பருத்தி பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளது.


latest tamil news




இந்த ஆண்டு, இது 7 முதல் 8 லட்சம் பேல்கள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். கோவையில் வரும் 24 முதல் 27 வரை, 'டெக்ஸ்பேர்ஸ் 2022' சர்வதேச ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி நடக்கிறது. இதில் புதிய கண்டுபிடிப்புகளாக, 50க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் அறிமுகமாகின்றன. உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் இயந்திரங்கள், உதிரிபாகங்கள் காட்சியில் இடம் பெறுகின்றன.

ஜவுளித்தொழிலில் கடந்த 2 ஆண்டுகளில், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் எப்.டி.ஏ., எனப்படும், வரியில்லா வணிக ஒப்பந்தம் இங்கிலாந்து மற்றும் கனடாவுடன் ஏற்பட்டால், ஜவுளித்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும். இதன் அளவு ரூ.50 ஆயிரம் கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஜவுளித்தொழில் வளர்ச்சி நன்றாக இருப்பதால், இயந்திரங்களுக்கு தேவையும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-202207:07:32 IST Report Abuse
அப்புசாமி வெங்காயம், தக்காளி விவசாயிகளுக்கு ஆப்பு வெச்சாச்சு. அடுத்த ஆப்பு பருத்தி விவசாயிகளுக்குத்தான். ரெடியா இருந்ங்க தோழர்களே..
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
19-ஜூன்-202200:29:12 IST Report Abuse
Neutral Umpire மொராக்கோ கம்போடியா வியத்நாம் பங்களாதேஷ் சீனா பாகிஸ்தான் பருத்தி ஆடைகளே அமெரிக்க மால்களில் அதிகம் தென்படுகின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X