வால்பாறை செல்ல ரூ.30 நுழைவு கட்டணம்: வனத்துறை கெடுபிடி; மக்கள் அதிருப்தி

Updated : ஜூன் 18, 2022 | Added : ஜூன் 18, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சோதனைச்சாவடியை கடக்கும் சுற்றுலா பயணியருக்கு, நுழைவு கட்டணம், வாகனத்துக்கு தனியாக கட்டணம் வசூல் செய்யப்படுவதால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, வால்பாறை முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளதால், வனத்துக்குள் நுழையும் சுற்றுலாப் பயணியரை கண்காணிக்கவும், குற்றங்களை தடுக்கவும், ஆழியாறில் வனத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சோதனைச்சாவடியை கடக்கும் சுற்றுலா பயணியருக்கு, நுழைவு கட்டணம், வாகனத்துக்கு தனியாக கட்டணம் வசூல் செய்யப்படுவதால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.latest tamil news
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, வால்பாறை முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளதால், வனத்துக்குள் நுழையும் சுற்றுலாப் பயணியரை கண்காணிக்கவும், குற்றங்களை தடுக்கவும், ஆழியாறில் வனத்துறை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இதை கடக்கும் சுற்றுலா பயணியரிடம், 30 ரூபாய் நுழைவுக்கட்டணம், பைக்குகளுக்கு 20, கார்களுக்கு 50, பஸ்களுக்கு 100, கேமராக்களுக்கு 50 முதல் 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கவியருவிக்கு செல்வோரிடம் தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, ஆழியாறு, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள உள்ளூர் மக்களிடம் வனத்துறையினர் கட்டணம் வசூலிக்கின்றனர்.


latest tamil news
பொதுமக்கள் கூறியதாவது: ஆழியாறு சோதனைச்சாவடியில், தனியார் சுற்றுலா மையம் போல் கட்டணம் வசூலிப்பது வருத்தமளிக்கிறது. வால்பாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கும், பணி நிமிர்த்தமாக செல்ல வேண்டுமென்றாலும், நுழைவுக்கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டண வசூலை முறைப்படுத்தி, கோவை மாவட்ட மக்களை கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும்.

கவியருவிக்கு செல்வதற்கும் அங்கு, வாகனங்கள் 'பார்க்' செய்வதற்கு மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய கட்டண முறையை பின்பற்றுகின்றனர். இந்த கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

சரிபார்ப்பு'


ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் கூறியதாவது:
கடந்த 2018 பிப்., 8ம் தேதி வனத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், புலிகள் காப்பகம், வனவிலங்கு சரணாலயம் உட்பட பகுதிகளில் நுழையும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டு, ஏற்கனவே வசூலித்த கட்டணங்களை திருத்தி அமைத்துள்ளது. இந்த அரசாணையின் படியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் மக்களிடம் ஆதார் அட்டை மற்றும் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, கட்டணமின்றி அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஜூன்-202217:13:01 IST Report Abuse
Lion Drsekar திருக்கோவில்களுக்கு செல்லுங்கள் ஊருக்குள் நுழையும்போது ஒரு வரி, வாகனம் நிறுத்தும்போது ஒரு வரி, திருக்கோவிலுக்குள் செல்லும்போது தரிசனத்துக்கு ஒரு வரி, அர்ச்சனைக்கு ஒரு வரி, ஊர்வன இனத்தை சேர்ந்த பல்லி யைக் காண வரி இன்னமும் அடுக்கிக்கொண்டே போகலாம், இதற்குதான் சுதந்திரம் வாய்க்கொடுத்தார்கள் நம் தியாகிகள், கட்சிக்காரர்கள் என்ற நபர்கள் ஊழியர்கள் என்ற பெயரில் சம்பாதிக்க இந்த சுதந்திரம்,வந்தே மாதரம்
Rate this:
Cancel
18-ஜூன்-202214:51:26 IST Report Abuse
Ram Pollachi குப்பையை கொட்டினால் தொலையுது விட்டுவிடலாம் கூட்டிக்கிட்டு வந்து குட் பை சொல்லி விடுகிறார்கள். பல வருடங்களாக இங்கே இருந்து உழைத்த வால்பாறை அய்யர் எல்லாம் ரங்க சமுத்திரத்தில் குடியேறிவிட்டார்கள். இப்போது செல்லும் கூட்டம் சுற்றுலா வரும் ஜனங்களின் பணத்தை பிடுங்க. பிரச்சினை வேண்டாம் ஆழியாறு, வால்பாறை தடத்தை மூடி விடுங்கள் வன விலங்குகளாவது நிம்மதியாக இருக்கட்டும்...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
18-ஜூன்-202211:04:53 IST Report Abuse
raja கேடுகெட்ட விடியாத ஆட்சியில் அனைத்து வகைகளிலும் தமிழனிடம் இருக்கு கப்ருகளை உருவுகிறார்கள்... தமிழனுக்கு இது தேவைதான் கேவலம் ரூவா 2000 க்கு ஆசைப்பட்டு திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்டத்துக்கு தன்னையே விற்றுவிட்டான்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X