பழனிசாமிக்கு 64; பன்னீர்செல்வத்திற்கு 11: மா.செ.,க்கள் ஆதரவு?| Dinamalar

பழனிசாமிக்கு 64; பன்னீர்செல்வத்திற்கு 11: மா.செ.,க்கள் ஆதரவு?

Updated : ஜூன் 18, 2022 | Added : ஜூன் 18, 2022 | கருத்துகள் (60) | |
சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்ற கோஷத்தால் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இன்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு அவரது ஆதரவாளர்களுடன் வந்தார். சில நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்த போது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் லேசான

சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்ற கோஷத்தால் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இன்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு அவரது ஆதரவாளர்களுடன் வந்தார். சில நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்த போது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் லேசான கைகலப்பில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரின் மண்டை உடைந்தது.


ஆதரவு

அ.தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக 75 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் 64 பேர் பழனிசாமிக்கும், 11 பேர் பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனிடையே முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறும் போது, அ.தி.மு.க.,வில் இரட்டை தலைமை தான் தொடரும். ஒற்றை தலைமைக்கு சட்டத்தில் இடமில்லை என்றார்.
ஆலோசனை

இந்நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமார், சண்முகம் ஆகியோருடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக சென்னையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.latest tamil newsஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த ஆலோசனையில் தேனிமாவட்ட செயலர் சையதுகான், விருதுநகர் மாவட்ட செயலர் சாத்தூர் ரவிச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்ட செயலர் அசோகன், திருச்சி மாவட்ட செயலர் வெல்லமண்டி நடராஜன், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் , முன்னாள் எம்எல்ஏ., சிவகாசி பாலகங்காதரன், கோவை செல்வராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர். மற்றும் நகர, பகுதி செயலர் சிலர் பங்கேற்றுள்ளனர்.


latest tamil newsஇது போல் எதிர்கட்சி தலைவரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் சிலர் பங்கேற்றனர். சேலம் மாவட்ட செயலர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் சிலர் , வைகை செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். இவருக்கு ஆதரவாக பலர் கோஷமிட்டனர்.
ஆதரவாளர் மீது மண்டை உடைப்பு

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான பெரம்பலூரை சேர்ந்த நிர்வாகி மீது பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அதில், அவரது மண்டை உடைந்தது. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரா நீ என கேட்டு தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X