உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: இரட்டை இலை கிடைக்குமா?

Updated : ஜூன் 19, 2022 | Added : ஜூன் 19, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள, 510 உள்ளாட்சி பதவிகளுக்கு, அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மனு தாக்கல் நாளை துவங்குகிறது. வரும் 27ம் தேதி மனு தாக்கலுக்கு
AIADMK, Two Leaves, admk

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



தமிழகத்தில் காலியாக உள்ள, 510 உள்ளாட்சி பதவிகளுக்கு, அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மனு தாக்கல் நாளை துவங்குகிறது. வரும் 27ம் தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாள். தேர்தல் நடக்க உள்ள 510 பதவிகளில், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும்; 22 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும்.


latest tamil news



அ.தி.மு.க., வேட்பாளர்கள் களம் இறங்கினால், அவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் என்பதற்கான படிவத்தில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட வேண்டும். தற்போது, கட்சியில் ஒற்றைத் தலைமை பதவி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையே, நீயா நானா போட்டி எழுந்துள்ளது.



இந்நிலையில், தேர்தல் நடக்க உள்ள, உள்ளாட்சி பதவிகளுக்கு, உடனடியாக வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும். அவர்கள் கட்சி சின்னமான இரட்டை இலையில் போட்டியிட, கட்சி அங்கீகார கடிதத்தில், இருவரும் கையெழுத்திட வேண்டும். இது நடக்குமா என்பது தெரியவில்லை. எனவே, இந்த உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிடுமா; அ.தி.மு.க., சார்பில் யாரேனும் களம் இறங்கினால், அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
19-ஜூன்-202218:11:22 IST Report Abuse
John Miller இப்படியே வரும் நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தல்களில் போட்டியிடாமல் இருந்தால் கொள்ளை அடித்து வைத்து இருக்கும் சொல்லிற்கு பாதகம் இல்லை.
Rate this:
Cancel
Sukumaran - Trichy,இந்தியா
19-ஜூன்-202217:40:36 IST Report Abuse
Sukumaran ....
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
19-ஜூன்-202215:27:24 IST Report Abuse
Raj பேசாம...பிஜேபியை நிர்பந்தித்து OPS ஐ ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து விடுங்கள், அதிமுக ஆதரவு இல்லாமல் பிஜேபி ஜெயிக்க முடியாது. இடபாடி தலைமையில் அதிமுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X