7,300 அரசு டவுன் பஸ்களும் இயங்க அரசு உத்தரவு

Updated : ஜூன் 19, 2022 | Added : ஜூன் 19, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை-தமிழகம் முழுதும் 7.300 அரசு டவுன் பஸ்களை முழுமையாக இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்கள் கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், அரசு போக்குவரத்து கழக செயல்பாடுகள், புதிய பஸ்கள் கொள்முதல், பணியாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-தமிழகம் முழுதும் 7.300 அரசு டவுன் பஸ்களை முழுமையாக இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.latest tamil newsஅரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்கள் கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், அரசு போக்குவரத்து கழக செயல்பாடுகள், புதிய பஸ்கள் கொள்முதல், பணியாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: பயணியரின் தேவை கருதி, அரசு பஸ்கள் இயக்கம் சீராக இருக்க வேண்டும். அரசு நகர பஸ்களில், பெண்களுக்கான இலவச பயண திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண் பயணியரின் எண்ணிக்கையும், 62 சதவீதமாக உயர்ந்துஉள்ளது. கடந்த மாதம் வரை, இந்த திட்டத்தின் கீழ், 107 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.


latest tamil news
தற்போது, பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது. எனவே, பள்ளி மாணவர்கள், பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுதும் உள்ள, 7,300 அரசு டவுன் பஸ்களை முழுமையாக இயக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அனைத்து கிளை மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G Mahalingam - Delhi,இந்தியா
19-ஜூன்-202209:36:47 IST Report Abuse
G  Mahalingam மறக்காமல் குடை எடுத்து கொண்டு போகவும். மழைக்கு தெரியாது பஸ்ஸில் பெய்கிறோம் என்று.
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
19-ஜூன்-202218:02:56 IST Report Abuse
சாண்டில்யன்எடப்பாடி ஆட்சியில் சென்னையில் பஸ் பயணம் செய்திருப்பாரோ அந்த நீங்கா நினைவுகளோ?...
Rate this:
Cancel
நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு தென் தமிழகத்தில் இயங்கும் காலவதியான நகர பேருந்துகள் மற்றும் கிராமத்திற்கும் செல்லும் பேருந்துகளை கொஞ்சம் நல்ல பேருந்துகளாக இயக்கவும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஜூன்-202207:39:57 IST Report Abuse
Kasimani Baskaran டிஸ்மிஸ் செய்வதற்குள் அண்ணாமலைக்குத் தெரியாமல் காசடிப்பது சாத்தியமில்லை - ஏனென்றால் அதிகார வர்க்கம் கூட்டமாக அண்ணாமலையை கூப்பிட்டு அனைத்துத்தரவுகளையும் கொடுத்துவிடும்... பாவம் தீ..மூ...கா...
Rate this:
chandrasekar - pune,இந்தியா
19-ஜூன்-202213:13:31 IST Report Abuse
chandrasekarதவறான கருத்து. இப்பொழுது அரசு விழித்துக்கொண்டுவிட்டது. புள்ளிவிவரத்தை கசிய விடுகிற அனைத்து புல்லுருவிகளையும் களை எடுத்து விட்டார்கள். தீ ம் க காரங்க தீயையே மிதிச்சவங்க. இப்போ இந்த களைகளை மிதிக்க மாட்டார்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X