வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், இரண்டு நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளை (ஜூன் 20) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 21) இரு நாட்களும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூரில் அரசு விழாக்களில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜூன் 20) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (ஜூன் 21) திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த சூழலில் முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே இந்நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப் படுகின்றன. இவற்றிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.