வீடுகளில் தனிமையைப் போக்க சிறு செடிகள் வளர்க்க இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் விரும்புவர். இதற்கு மாடித் தோட்டம் அமைக்கலாம். ஆனால் தொட்டிச் செடிகளில் ரோஜா பூக்கள், கொடிகள் வளர்க்க அதிக பராமரிப்பு தேவைப்படும்.
மேலும் மாடியில் உள்ள தொட்டிச் செடிகளை நாம் நினைத்த நேரத்தில் கண்டு ரசிக்க முடியாது. ஆனால் நமது அலுவலக மேஜை முதல் வீட்டு ஹால்வரை அனைத்திலும் பொருந்தக்கூடி ஜப்பானிய மர வகை பொன்சாய். பொன்சாய் மர வளர்ப்பு குறித்த முக்கியத் தகவல்களைப் பார்ப்போமா?
![]()
|
*ஜப்பானில் 16-ம் நூற்றாண்டு கட்டுபிடிக்கப்பட்ட 'பொன் சாய்' (盆栽) என்ற ஜப்பானிய சொல்லுக்கு தொட்டியில் வளர்க்கப்படும் மரம் எனப் பொருள். இந்தியாவின் கலிங்க நாட்டு மன்னரான சந்திரகுப்த மவுரியர் காலத்து ஸ்துபி ஒன்றில் பொன்சாய் மர உருவம் கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பொன்சாய் அப்போது துவங்கியே இந்தியாவில் வளர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
*ஓங்கி உயர்ந்து வளரக்கூடிய அல், அரசு உள்ளிட்ட மரங்களின் வேர்களை துவக்கம் முதலே நாசுக்காக வெட்டி அதனை அகலத் தொட்டி மண்ணில் நட்டு வளர்த்தால் அவை பெரிய மரங்களின் சிறு வடிமம் போல வளரத் துவங்கும். இதைத்தான் ஜப்பானியர்கள் பொன்சாய் மரங்கள் என்று அழைக்கின்றனர்.
*இதனை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம், பணம், அமைதி வந்து சேரும் என ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
*ஆலமரத்தை வேர்களை வெட்டி பொன்சாய் மரமாக்கிவிடலாம். ஆனால் அதன் சராசரி ஆயுள் குறையாது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். ஓர் ஆலமரம் 70 வருடங்கள் வாழ்கிறது என்றால் முறையாகப் பராமரித்தால் பொன்சாய் ஆலமரமும் அதே 70 ஆண்டுகள் வாழும்.
*ஆலமரத்தில் பூக்கும் பூ, காய், கனி, வயதானால் தோன்றும் விழுது என அனைத்தும் பொன்சாய் ஆலமரத்திலும் தோன்றும்.
![]()
|
* பொன்சாய் மரம் தொட்டியில் வளர்வதால் இரண்டு ஆண்டுக்கொருமுறை இதன் வேர்களை அதற்கான பிரத்யேக கத்தரிக்கோல் கொண்டு டிரிம் செய்துவிட வேண்டும்.
*நமது அன்றாட அலுவல்களுக்கிடையே பொன்சாய் மரங்களை பராமரிப்பது கடினம் என்பர். ஆனால் பொன்சாய் பராமரிப்பு பழகிவிட்டால் அது உங்கள் ஆயுட்காலம் முழுக்க உங்களது உற்ற நண்பனாக உடன் இருக்கும்.