சைக்கிளில் இருந்து விழுந்தஅமெரிக்க அதிபர் பைடன்| Dinamalar

சைக்கிளில் இருந்து விழுந்தஅமெரிக்க அதிபர் பைடன்

Added : ஜூன் 20, 2022 | |
வாஷிங்டன்,-அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 79, சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த 'வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெலவர் மாகாணத்தில் உள்ள கடற்கரை இல்லத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், அங்குள்ள சாலையில், தன் மனைவி ஜில் பைடனுடன், அவர் சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்தார். அப்போது, சாலையின் எதிரில் வந்தவர்கள் ஜோ
சைக்கிளில் இருந்து விழுந்தஅமெரிக்க அதிபர் பைடன்

வாஷிங்டன்,-அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 79, சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த 'வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெலவர் மாகாணத்தில் உள்ள கடற்கரை இல்லத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், அங்குள்ள சாலையில், தன் மனைவி ஜில் பைடனுடன், அவர் சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்தார். அப்போது, சாலையின் எதிரில் வந்தவர்கள் ஜோ பைடனை நோக்கி கையசைத்தனர். அவர்களிடம் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்த முயன்ற போது, ஜோ பைடன் தவறி கீழே விழுந்தார். உடனடியாக எழுந்த அவர், 'எனக்கு எதுவும் ஆகவில்லை. நலமாக உள்ளேன்' என்றார்.

இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிபருக்கு எந்த பிரச்னையும் இல்லை.மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X