கொசஸ்தலை ஆற்றில் பாலம்: 30 கிராம மக்களின் போக்குவரத்து பிரச்னைக்கு விடிவு

Updated : ஜூன் 21, 2022 | Added : ஜூன் 20, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
திருத்தணி: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 20 கோடி ரூபாய் செலவில் போக்குவரத்து பாலம் கட்டும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. துாண்கள் அமைப்பதற்காக, இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எட்டு மாதங்களுக்குள் பணிகள் முடித்து, இந்த பாலத்தில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால்,

திருத்தணி: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 20 கோடி ரூபாய் செலவில் போக்குவரத்து பாலம் கட்டும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. துாண்கள் அமைப்பதற்காக, இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எட்டு மாதங்களுக்குள் பணிகள் முடித்து, இந்த பாலத்தில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 30 கிராம மக்களின் போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க உள்ளது.



latest tamil news




திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி- நாகாலாபுரம் மாநில நெடுஞ்சாலை, நெமிலி - என்.என்.கண்டிகை இடையே கொசஸ்தலை ஆறு செல்கிறது. இங்கு, ஆற்றின் குறுக்கே, 300 மீட்டர் நீளமும், 5 அடி உயரத்திற்கு தரைப்பாலம், 1998ம் ஆண்டு, ஒன்றரை கோடி ரூபாய் செலவில் திருத்தணி நெடுஞ்சாலை துறையினரால் கட்டப்பட்டது.இந்த தரைப்பாலம் வழியாக, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் ஆந்திர மாநிலம் நாகலாபுரம், பிச்சாட்டூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து உட்பட மற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.


போக்குவரத்து துண்டிப்பு


இந்நிலையில், 2015ம் ஆண்டு, நவம்பர் மாதம், 16ம் தேதி கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் தரைப்பாலம் முற்றிலும் உடைந்து, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.தரைப்பாலம் உடைந்ததால், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், ஆற்றை கடக்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆற்றில் வெள்ளம் குறைந்ததும், 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நெடுஞ்சாலை துறையினர் பல லட்சம் ரூபாய் மதிப்பில், கொசஸ்தலை ஆற்றை கடப்பதற்காக தற்காலிக தரைப்பாலம் அமைத்தனர்.அதைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு மீண்டும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அந்த தற்காலிக தரைப்பாலம் உடைந்தது. பின், ஒன்றரை மாதத்திற்கு பின் மீண்டும் தற்காலிக பாலம் அமைத்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.


latest tamil news




இந்நிலையில், கடந்தாண்டு, நவம்பர் மாதம், 12ம் தேதி மீண்டும் கன மழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், இரண்டாவது முறை தற்காலிக தரைப்பாலம் மீண்டும் உடைந்தது.இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம், 22ம் தேதி, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், தற்காலிக தரைப்பாலம் அமைத்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. தற்போது, வாகனங்கள் அந்த தரைப்பாலம் வழியாக சென்று வருகின்றன.

இந்நிலையில், அடிக்கடி உடையும் தரைப்பாலத்திற்கு நிரந்தர தீர்வு காண, சென்னை நெடுஞ்சாலை துறை திட்டங்கள் கோட்டம்-1ன் திட்டத்தின், 2020 - 21ம் ஆண்டு நிதியில் இருந்து, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு, கடந்தாண்டு மார்ச் மாதம், 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, டெண்டர் ஒப்பந்ததாரர், கடந்தாண்டு அக்டோபர் மாதம், பாலம் கட்டுவதற்கு மண் பரிசோதனை செய்து, பாலம் அமைப்பதற்கு 'டெஸ்ட் பைல்' - பாலம் உறுதி தன்மை அறியும் - மண் மூட்டைகள் அடுக்கி வைத்தனர்.நவம்பர் மாதம் பெய்த கன மழையால் மண் மூட்டைகள் அடித்து செல்லப்பட்டதால் பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.


மீண்டும் பணிகள் துவக்கம்


இந்நிலையில், 350 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள், கடந்த ஏப்ரல் மாதம் முதல் துவக்கப்பட்டன.இது குறித்து, சென்னை நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு, உறுதி தன்மை அறிவதற்கு, 15.5 மீட்டர் ஆழத்திற்கு ஆற்றில் பள்ளம் தோண்டப்பட்டு, அதன் மீது, 5 லட்சம் கிலோ சிமென்ட் கற்கள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அடுக்கி வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.பாலம் தன்மை உறுதி செய்யப்பட்டதால், தற்போது, ஆற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு, 13 துாண்கள், 5 மீட்டர் - 15 அடி உயரத்திற்கு அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

எட்டு மாதத்திற்குள்


துாண்கள் அமைப்பதற்கு இயந்திரம் கிணறு பள்ளம் தோண்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. இன்னும் எட்டு மாதத்திற்குள் உயர்மட்ட பாலம் கட்டி முடித்து, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு விட திட்டமிட்டுள்ளோம்.இப்பணிகளுக்கு தேவையான இரும்பு கம்பிகளும், 10 லட்சம் கிலோ சிமென்ட் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துள்ளோம்.



இவ்வாறு அவர் கூறினார்.


நிரந்தர தீர்வு கிடைக்கும்


நெமிலி - என்.என்.கண்டிகை இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதால், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்படும். மேலும், மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், போக்குவரத்துக்கு தடையாக இருக்காது. குறிப்பாக விவசாய மக்கள் ஆற்றை கடந்து தான் விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. உயர்மட்ட பாலத்தால், நெமிலி, என்.என்.கண்டிகை கிராம விவசாயிகள் அதிகளவில் பயன்பெறுவர்.- என்.சந்தோஷ், வெங்கடாபுரம், என்.என்.கண்டிகை.


அதிகாரிகள் ஒத்துழைப்பு அவசியம்


நெமிலி - என்.என்.கண்டிகை இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் உயர்மட்ட பாலப் பணிகள் ஆய்வு செய்வதற்கு அனைத்து அதிகாரிகளும், சென்னை குரோம்பேட்டையில் இருந்து வர வேண்டியுள்ளது. அதிகாரிகள் குறித்த நேரத்தில் வராததால் பாலப் பணிகள் நடப்பதில் காலதாமதம் ஆகிறது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு கொடுத்தால், எட்டு மாதங்களில் முடிய வேண்டிய பணிகள் ஆறு மாதத்திற்குள் முடிக்கவும் வாய்ப்பு உள்ளது என, உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20-ஜூன்-202212:10:57 IST Report Abuse
Ramesh Sargam புதியதாக அமையும் பாலமாவது ஒரு ஐம்பது ஆண்டுகள் உறுதியாக நிற்குமா? அல்லது அடுத்து அரசு பொறுப்பு ஏற்கும் அரசியல் கட்சிக்கு தோதாக, இப்பொழுது அமைக்கப்படும் பாலம் ஒரு சில ஆண்டுகளில் இடிந்துவிழுந்து, அவர்கள் வேறு ஒரு பாலம் என்று கூறி மேலும் பல கோடிகளை அவர்கள் விழுங்கும்படியாக பாலம் அமையுமா...?
Rate this:
Cancel
20-ஜூன்-202209:31:38 IST Report Abuse
அப்புசாமி ,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X