மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவமனை அமைக்கிறது ஹிந்து அறநிலையத்துறை

Updated : ஜூன் 21, 2022 | Added : ஜூன் 20, 2022 | கருத்துகள் (59) | |
Advertisement
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவசர சிகிச்சையளிக்க ஹிந்து அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள், வெளிநாடுகளில் இருந்து தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்காக நீண்ட வரிசையில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவசர சிகிச்சையளிக்க ஹிந்து அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.latest tamil news
உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள், வெளிநாடுகளில் இருந்து தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு மாரடைப்பு, மயக்கம் உட்பட திடீரென சில உடல்நலக்குறைவு ஏற்படுவது இயல்பு. இதற்காக அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்துச் செல்ல ஒரு ஆம்புலன்ஸ் உள்ளது. இந்நிலையில் முதலுதவி உட்பட விரைந்து சிகிச்சையளிக்க ஹிந்து அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனையும் அமைய உள்ளது.

கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பக்தர்களின் வசதிக்காக மருத்துவமனை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பி உள்ளோம். தலா 2 டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் இருப்பர். உடல்நலக்குறைவு ஏற்படும் பக்தர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும். பணிகள் முடிக்கப்பட்டபின் இம்மருத்துவமனை தற்காலிகமாக கோயில் உள்ளே ஒரு கட்டடத்தில் செயல்படும். படுக்கை வசதியும் உண்டு. மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர், என்றார்.


latest tamil news
மருத்துவ அலுவலர், செவிலியர் பணிக்கு விண்ணபிக்க விரும்புவோர் ஹிந்து மதத்தவராக, தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் உள்ளன. விண்ணப்ப படிவம், நிபந்தனைகளை www.maduraimeenakshi.org, www.tnhrce.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம், என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyamnats - tirunelveli,இந்தியா
21-ஜூன்-202208:40:25 IST Report Abuse
shyamnats கோவிலுக்குள் மருத்துவ மனை - தவறான குறுகிய நோக்கம் கொண்ட முடிவு. தேவை என்றால் கோவிலுக்கு வெளியே அரசு செலவில் கட்ட வேண்டும். அது போக மதுரை நகரத்தில் இல்லாத ஆஸ்பத்ரிகலா? இந்து மதத்தில், மூக்கை நுழைப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு விடியல் அரசு செயல் படுகிறது. இதுவரை எவ்வளவு பக்தர்களுக்கு அவசர மருத்துவ நிலை ஏற்பட்டது என்பது போன்ற தரவுகளை தரலாமே? பக்தர்களின் காணிக்கைகள், இந்து மத மேம்பாட்டுக்கானது. அதனை அரசின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தவறானது.
Rate this:
Cancel
rukmani - princeton,யூ.எஸ்.ஏ
21-ஜூன்-202206:55:36 IST Report Abuse
rukmani Unnecessary endeavour and waste of temple funds for non-religious activity. Should stop forthwith.
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
20-ஜூன்-202220:36:21 IST Report Abuse
C.SRIRAM ,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X