" பொதுக்குழுவுக்கு பன்னீர்செல்வம் வருவார்" - பழனிசாமி தரப்பு நம்பிக்கை

Updated : ஜூன் 21, 2022 | Added : ஜூன் 20, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும் எனவும், கட்சியில் அசாதாரண சூழல் நிலவுவதால் 23ம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில் கழக மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அளித்த பேட்டியில் வரும் 23 ம் தேதி நிச்சயம் திட்டமிட்டபடி
ADMK, General Committee, OPS, EPS, அதிமுக, பொதுக்குழு, ஓபிஎஸ், இபிஎஸ்,

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும் எனவும், கட்சியில் அசாதாரண சூழல் நிலவுவதால் 23ம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில் கழக மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அளித்த பேட்டியில் வரும் 23 ம் தேதி நிச்சயம் திட்டமிட்டபடி கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடக்கும். இந்த கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வருவார் என தெரிவித்தார்.

சென்னையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: எம்.ஜி.ஆர் காலம் முதல் கடந்தமுறை நடைபெற்ற பொதுக்குழு வரை நிறைவேற்றப்பட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை. இது குறித்த கடிதத்தை பழனிசாமிக்கும் அனுப்பியுள்ளோம். கடிதத்தில், பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என நீங்கள் (பழனிசாமி) தெரிவித்தீர்கள்.

ஆனால், ஜெயலலிதா அதே மண்டபத்தில் பொதுக்குழு கூட்டியபோதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்களை அழைத்திருக்கிறார் என முன்னாள் நிர்வாகிகள் சிலர் எங்களிடம் ஆதங்கமாக கூறியுள்ளனர். பொதுக்குழுவில் அதிமுக முன்னோடிகளை அழைப்பதே கட்சியின் மரபு. அதேபோல், 23ம் தேதிக்கான நிகழ்ச்சி நிரல் கிடைக்கப்பெறவில்லை என செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கூறுகின்றனர். மேலும், முன்னறிவிப்பு இன்றி 14ம் தேதி நடந்த கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமை குறித்து பேசப்பட்டது.


latest tamil news


இதனால் கட்சியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், 23ம் தேதி நடைபெற உள்ள செயற்குழு, பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும். அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை இருவரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என கடிதத்தில் குறிப்பிட்டு பழனிசாமிக்கு நேற்றே அனுப்பியுள்ளோம். அதனை இப்போது வெளியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

திட்டமிட்டப்படி நடைபெறும்


இந்த நிலையில் பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும், பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாகவும், வைத்தியலிங்கம் கூறியது அவரது சொந்த கருத்து எனவும் இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.போலீசில் புகார்


அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க கோரி ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்திய நிலையில், பொதுக்குழுவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால், அக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என ஓபிஎஸ் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் மதியம் பேட்டியளித்த கே.பி. முனுசாமி; " 23 ம் தேதி பொதுக்குழு நிச்சயம் நடக்கும் அந்நாளில் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் நிச்சயம் வருவார். பொதுக்குழு என்ன சொல்கிறதோ அதனை ஏற்று கொள்வார் " என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
21-ஜூன்-202202:18:34 IST Report Abuse
அன்பு பழனிசாமி சிறந்த சாணக்கியவாதியாக உள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன், பன்னீரை கழட்டிவிட்டால் தான், ரெட்டை இலையை பிஜேபி முடக்காது என்று தெரிந்துகொண்டு, இப்போதே பன்னீரை கழட்டிவிட தயார் ஆகிவிட்டார். ஒருகால் லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டால், ரெட்டை இலையை பிஜேபி முடக்கி, அந்த சமயத்தில் தாமரையை மலரவிடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் இப்போது அதற்கான வாய்ப்பில்லை. அதனால் அமித் ஷா இந்த இருவர் சண்டையை லோக்சபா தேர்தல் வரை தள்ளிபோடும்படி அறிவுறுத்தினாலும் ஆச்சரியமில்லை. ஆனால் எடப்பாடி வீம்பு பிடிப்பார். ஒரு ரைடை வீட்டிற்கு அனுப்பினால், எகிறும் எடப்பாடி அடங்கிவிடுவார்.
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
20-ஜூன்-202219:13:31 IST Report Abuse
Gopinathan S இந்த அரசியல் கோமாளிகள் ஆட்டத்திற்கு ஏன் மீடியாக்கள் இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன? வழக்கம் போல யானை வெடி (ஓபிஎஸ்) வெடிக்கும் என்று எதிர்பார்க்கும் அப்பாவி தொண்டர்கள் இம்முறையும் அது ஒரு "ஊசி வெடி" அதுவும் நமது போன வெடி என்பது வரும் வியாழன் அன்று தெரியும்...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
20-ஜூன்-202218:20:18 IST Report Abuse
Vena Suna ஓபிஎஸ் சசிகலாவோடு இனைந்து புதிய கட்சி தொடக்கம். கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X