கல்பாக்கத்தில் மத்திய அரசு வேலை - ரூ.95,033 வரை சம்பளம்..!

Updated : ஜூன் 20, 2022 | Added : ஜூன் 20, 2022 | |
Advertisement
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி (Medical Officer), செவிலியர் (Nurse) மற்றும் சுகாதார ஆய்வாளர் (Technician/Sanitary Inspector) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 12 மருத்துவ அதிகாரிகள், 8 செவிலியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.கல்வி தகுதிமருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவம்
Job, Job Offer, வேலைவாய்ப்பு, கல்பாக்கம், அணுமின் நிலையம், Kalpakkam, Power plant, MBBS, Nurse, Technician, sanitary Inspector, Dinamalar, dinamalar News, Dinamalar Dot com, Dinamalar Daily, தினமலர், தினமலர் செய்திகள்,

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி (Medical Officer), செவிலியர் (Nurse) மற்றும் சுகாதார ஆய்வாளர் (Technician/Sanitary Inspector) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 12 மருத்துவ அதிகாரிகள், 8 செவிலியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



கல்வி தகுதி


latest tamil news


மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவம் (MBBS) படித்திருக்க வேண்டும். ஓராண்டு பணியாற்றிய அனுபவத்துடன், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.


செவிலியர் பணிக்கு டிப்ளமோ நர்சிங் தேர்ச்சி பெற்று மத்திய/மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும், அல்லது பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்று, 3 ஆண்டுகள் மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.


சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 10 மற்றும் +2 60சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, சுகாதார ஆய்வாளருக்கான ஒரு வருட சான்றிதழ் படிப்பு (One Year Certificate Course) முடித்திருக்க வேண்டும்.




சம்பள விவரம்


latest tamil news


மருத்துவ அதிகாரி பணிக்கு மாத சம்பளமாக ரூ.95,033 வரை வழங்கப்படும்.


செவிலியர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.62,578 வரை வழங்கப்படும்.


சுகாதார ஆய்வாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.31,490 வரை வழங்கப்படும்




விண்ணப்பிக்கும் முறை


latest tamil news


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://docs.google.com/spreadsheets/d/1OC2ykW9blwRTvDiKFHSxeALD_oUiK1IN/edit#gid=1731142833 என்ற வலைதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை மைக்ரோசாப் எக்செல் (Microsoft Excel) மூலம் பூர்த்தி செய்து careergso@igcar.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 20.06.2022 மாலை 5 மணிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 24.06.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.



நேர்க்காணல் விவரம்


latest tamil news


விண்ணப்பதாரர்கள் நேர்க்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்க்காணலுக்கு அழைக்கப்படுபவர்கள் காலை 9.00 மணிக்குள் வரவேண்டும். 10.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. வரவேண்டிய இடம் - பொது சேவை அமைப்பு இணைப்பு கட்டிடம், கல்பாக்கம் 603102.


மருத்துவ அதிகாரிகளுக்கான நேர்க்காணல் 22.06.2022 மற்றும் 23.06.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. செவிலியர்களுக்கான நேர்காணல், 29.06.2022 மற்றும் 30.06.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. சுகாதார ஆய்வாளர்களுக்கான நேர்க்காணல் 01.07.2022 அன்று நடைபெறுகிறது. தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தற்காலிகமாக 6 மாதத்திற்கு மட்டுமே பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


விண்ணப்பிக்கும் முறை குறித்த விரிவான விளக்கத்தை http://www.igcar.gov.in/gso/recruitment/Advt02_2022.pdf என்ற வலைத்தள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X