கோவை சிறைச்சாலை மைதானத்தில் களைகட்டும் அரசு பொருட்காட்சி

Added : ஜூன் 20, 2022 | |
Advertisement
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் சரிவர நடக்காத நிலையில், கடந்த சில மாதங்களாக சிறிது சிறிதாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். சினிமா தியேட்டர், பார்க், பீச் என கூட்டம் அதிகரித்துள்ளது.இந்நிலையில் கோவை, மத்திய சிறைச்சாலை மைதானத்தில் கடந்த 11ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்கியுள்ளது. பட்ஜெட் செலவுக்குள் பொழுது
பொருட்காட்சி, கோவைஅரசுபொருட்காட்சி, அரசுபொருட்காட்சி, பொழுதுபோக்கு, நிகழ்வுகள், வீட்டுஉபயோகப்பொருட்கள், ராட்சதராட்டினம்
govtexhibitionatcoimbatore, govtexhibition, exhibition, coimbatore, food, shopping, fancyitems, jaintwheel

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் சரிவர நடக்காத நிலையில், கடந்த சில மாதங்களாக சிறிது சிறிதாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். சினிமா தியேட்டர், பார்க், பீச் என கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோவை, மத்திய சிறைச்சாலை மைதானத்தில் கடந்த 11ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்கியுள்ளது.

பட்ஜெட் செலவுக்குள் பொழுது போக்க நினைப்பவர்கள் இந்த பொருட்காட்சிக்கு செல்லலாம். அரசின் பல்வேறு துறைகளின் சாதனைகள் அடங்கிய ஸ்டால்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பேன்சி அயிட்டங்ளுக்கான ஸ்டால்கள், ராட்சத ராட்டினம் போன்ற குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள் மற்றும் விதவிதமான உணவு வகைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து, 45 நாட்கள் நடக்கும் இந்த பொருட்காட்சியில், நுழைவுக் கட்டணமாக, பெரியவர்களுக்கு 15 ரூபாய், சிறியவர்களுக்கு, 10 மற்றும் பள்ளி மாணவர்களுக்கு 5 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X