யோகா நிகழ்ச்சியில் புகுந்து தாக்குதல்; மாலத்தீவில் அத்துமீறல்

Updated : ஜூன் 21, 2022 | Added : ஜூன் 21, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
மாலத்தீவில் இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலவரக்காரர்கள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமுற்றனர்.மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம், மற்றும் மாலத்தீவு இளைஞர் நலத்துறை ஆகியன இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். இன்று காலை 6 மணிக்கு அங்குள்ள கலோலு விளையாட்டு அரங்கில் யோகா நிகழ்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மாலத்தீவில் இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலவரக்காரர்கள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமுற்றனர்.



latest tamil news


மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம், மற்றும் மாலத்தீவு இளைஞர் நலத்துறை ஆகியன இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். இன்று காலை 6 மணிக்கு அங்குள்ள கலோலு விளையாட்டு அரங்கில் யோகா நிகழ்வு நடந்துகொண்டிருந்தபோது மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து அங்கு யோகாவில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்தினர். இதில் பலரும் காயமுற்றனர். குறைந்த எண்ணிக்கையில் 10 போலீசார் மட்டுமே இருந்ததால் கலவரத்தை உடனடியாக தடுக்க முடியவில்லை. பின்னர் ராணுவம் வரவழைக்கப்பட்டது.


latest tamil news

இந்த நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி முனு மஹாவர், மாலத்தீவு இளைஞர் நலத் துறை அமைச்சர் அகமது மகலூப், இந்திய கலாச்சார அமைப்பின் நிர்வாகி தன்சீர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் , கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எனவும் அங்குள்ளவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (33)

Fastrack - Redmond,இந்தியா
22-ஜூன்-202201:34:08 IST Report Abuse
Fastrack மதம் பிடிச்சா இப்படி ஆகும் .
Rate this:
Cancel
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
22-ஜூன்-202200:15:27 IST Report Abuse
Krishnan முன்பு இலங்கையில் குண்டுவைத்து, சீனாவின் ஆதரவாளரான ராஜபக்சேவை ஆட்சியில் அமர்த்தினர். இப்பொழுது மாலத்தீவுகளில் செய்கிறார்கள். இலங்கையை போலவே மாலத்தீவுகளும் சீனாவின் கடனில் சிக்கி தவிக்கும் நாள் விரைவில், அதற்கு முன்னர் ஆட்சிமாற்றம் ஏற்படும்.
Rate this:
Cancel
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
21-ஜூன்-202218:31:34 IST Report Abuse
Velumani K. Sundaram ,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X