விஜயகாந்த் காலில் 3 விரல்கள் அகற்றம்

Updated : ஜூன் 22, 2022 | Added : ஜூன் 21, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சை செய்து வலது காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டது.தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி உள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அவ்வபோது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
dmdk, vijayakanth, Finger, விஜயகாந்த், தேமுதிக,  கால்விரல்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சை செய்து வலது காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி உள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அவ்வபோது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு, பரிசோதனை முடிவில், காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்து. அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டது.


latest tamil news


இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்னை காரணமாக விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், டாக்டர்கள் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. டாக்டர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் உள்ளார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான கருத்துகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Sivalingam - delhi,இந்தியா
25-ஜூன்-202206:43:28 IST Report Abuse
Manikandan Sivalingam மிக....அதிகமான.....புகழ்......மிக.....அதிகமான.....பணம்......செல்வம்.......செல்வாக்கு......அயல்......மொழி......மக்களை....ஆளும்...... அரசாட்சி........ விதியின்.....கோர......ருத்ரதாண்டவம்.......இதற்கு......விடை.....சொல்வார்......எவரும்.....இல்லை......
Rate this:
Cancel
kannagasabai - stur,இந்தியா
22-ஜூன்-202210:36:46 IST Report Abuse
kannagasabai ,,,,,,
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
22-ஜூன்-202210:26:40 IST Report Abuse
JeevaKiran நல்ல மனிதர். சீக்கிரம் பழைய நிலைக்கு வர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X