ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா

Updated : ஜூன் 22, 2022 | Added : ஜூன் 21, 2022 | கருத்துகள் (32+ 32) | |
Advertisement
புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட உள்ளார்.புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18 ல் நடக்கிறது. அதில் பா.ஜ., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. இந்த தேர்தலில், சரத்பவாரை
Yashwant Sinha, president, president election, election, opposition, opposition party, யஷ்வந்த் சின்ஹா, ஜனாதிபதி, ஜனாதிபதி வேட்பாளர், எதிர்க்கட்சி வேட்பாளர்

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட உள்ளார்.

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18 ல் நடக்கிறது. அதில் பா.ஜ., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. இந்த தேர்தலில், சரத்பவாரை வேட்பாளராக்க முயற்சி நடந்தது. ஆனால், அவர் ஏற்கவில்லை. இது தொடர்பாக கடந்த 15ம் தேதி டில்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, பரூக் அப்துல்லா மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இருவரும் மறுத்துவிட்டனர். அடுத்த கட்டமாக இன்று(ஜூன் 21), தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தலைமையில், எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்துவது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார்.


latest tamil news



ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., அமைச்சரவையில் நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். பின்னர் 2018 ல் பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய அவர், 2021ல் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து அவர் அக்கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு முன்னதாக அவர், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

Advertisement




வாசகர் கருத்து (32+ 32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
25-ஜூன்-202212:54:22 IST Report Abuse
Thiagarajan Kodandaraman தகுதி பா ஜா க வில் இருந்தவர்கள் மட்டுமே என்று நிதர்சனமான உண்மை ..சிலை திறப்பு விழாவுக்கே தலைமை பா ஜா க என்றும் ஆகி போச்சு ..மொத்தத்தில் அணைத்து வித பெரிய பதவிக்கும் இந்த ஒரு கட்சி தான் என்பது தெளிவாகி விட்டது
Rate this:
Cancel
வந்தேறிகளை வெறு - chittakong,வங்கதேசம்
22-ஜூன்-202205:49:48 IST Report Abuse
வந்தேறிகளை வெறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை , தலித் பெண்ணை எதிர்த்து உயர் சாதி வகுப்பினன், திருமா மற்றும் ஸ்டாலின் அவர்களின் நிலைப்பாட்டை இப்போது பார்க்கலாம், வழக்கம்போல தமிழக மாபியாக்கள் உயர்சாதியை தூக்கி பிடிக்கிறதா, தாழ்த்தப்பட்டோரை ஆதரிக்கிறதா என்று பாப்போம்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-ஜூன்-202205:04:08 IST Report Abuse
வெகுளி நல்லவேளை இவராவது சம்மதித்தார்.. இலையின்னா அடுத்ததாக திண்டுக்கல் லியோனிகிட்ட போயிருப்பாங்க....
Rate this:
Balaji - Chennai,இந்தியா
26-ஜூன்-202207:38:02 IST Report Abuse
Balajiஅவர் கிறித்தவர் என்பதால் எல்லோரும் ஏற்றிருப்பார்கள்.. ஹி ஹி.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X