
யோகா தினத்தை மக்கள் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடினர்.
தண்ணீரில் மிதந்தபடி,கப்பலில் சென்றபடி,காஷ்மீர் உறைபனியில் இருந்தபடி,நீர்வீழ்ச்சியின் பின்னனியில்,கங்கை கரையில்,விமானத்தில்,பூங்காக்களில் இரு சக்கர வாகனத்தில் என்று எங்கெல்லாம் யோகா செய்யமுடியுமோ அங்கெல்லாம் மக்கள் யோகா செய்து மகிழ்ந்தனர்.

மைசூரில் பிரதமர் மோடி அரண்மனை முன்பாக மக்களுடன் யோகா செய்தார்,இதே போல நாடு முழுவதும் உள்ள விஐபிக்கள் அந்தந்த ஊரின் அடையாளங்களின் முன்பாக யோகா செய்து அசத்தினர்,ஸ்ரீநகரில் முஸ்லீம் பெண்கள் பல இடங்களில் யோகா செய்தனர்.

பிரதமர் மோடியால் ஐநா வரை அங்கீகரிக்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட யோகா என்பது உடல் மற்றும் உள்ள ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது இதில் அரசியல் எதுவும் கிடையாது இருந்தும் தமிழக அரசு யோகாவிற்கு முக்கியத்துவம் தரவில்லை இருந்தும் மகாபலிபுரத்தில் மத்திய அரசு ஏற்பாட்டில் நடந்த யோகாவில் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் நடந்த யோகாவில் வயது வித்தியாசமின்றி பலரும் கலந்து கொண்டு ஒரு திருவிழா போல நடத்தினர் என்பதுதான் இனிமையான உண்மை.





-எல்.முருகராஜ்