வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அயோத்தி :அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழங்கிய நன்கொடையில், 22 கோடி ரூபாய் மதிப்பிலான 'செக்'குகள் பல்வேறு காரணங்களால் வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கு ஏராளமானோர் நன்கொடை வழங்கி வருகின்றனர். அவற்றில், 22 கோடி ரூபாய் மதிப்பிலான செக்குகள், வங்கிகளால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
![]()
|
இது குறித்து ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேலாளர் பிரகாஷ் குப்தா கூறியதாவது: ராமர் கோவில் கட்ட இதுவரை, 3,400 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது; 74 பேர் 1 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளனர்; 123 பேர், 25 - 50 லட்சம் ரூபாய்; 1,428 பேர், 5 - 10 லட்சம் ரூபாய் வரை நன்கொடை தந்துள்ளனர். 31 ஆயிரத்து 663 பேர், 1 - 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.
அதேசமயம், 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் செக்குகள், வங்கிகளால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன. கையெழுத்து சரியில்லாதது, வங்கி கணக்கில் பணமில்லாதது போன்ற காரணங்களால் செக்குகளை பணமாக்க முடியவில்லை. எனினும், அக்குறைபாடுகளை நீக்கி, மீண்டும் செக்குகள் வங்கியில் 'டிபாசிட்' செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.