சீன அதிபர் அழைப்பு: 'பிரிக்ஸ்'ல் மோடி பங்கேற்பு

Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : சீன அதிபர் ஷீ ஜிங்பிங் அழைப்பின் பேரில் 'பிரிக்ஸ்' மாநாட்டில் பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்க உள்ளார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கியுள்ளன.இந்தாண்டு சீனா தலைமையில் 14வது பிரிக்ஸ் மாநாடு நாளை பீஜிங்கில் துவங்க உள்ளது. இதில் பங்கேற்கும்படி சீன அதிபர் ஜிங்பிங்,
BRICS summit, PM Modi, Narendra Modi, China, நரேந்திர மோடி,மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : சீன அதிபர் ஷீ ஜிங்பிங் அழைப்பின் பேரில் 'பிரிக்ஸ்' மாநாட்டில் பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்க உள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கியுள்ளன.இந்தாண்டு சீனா தலைமையில் 14வது பிரிக்ஸ் மாநாடு நாளை பீஜிங்கில் துவங்க உள்ளது. இதில் பங்கேற்கும்படி சீன அதிபர் ஜிங்பிங், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news


சீனாவின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி நாளை பிரிக்ஸ் மாநாட்டில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்து கொள்ள உள்ளார். அவருடன் ரஷ்ய அதிபர் புடின், பிரேசில் அதிபர் ஜேயர் போல்சோனரோ, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.மாநாட்டையொட்டி இன்று நடக்கும் வர்த்தக கூட்டத்தில் பிரதமர் மோடியின் அறிக்கை வாசிக்கப்படும்.



நாளை மறுநாள் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக உறுப்பு நாடுகளின் உயர்மட்டக் கூட்டம் நடக்க உள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு, 41 சதவீதம் ; மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 24 சதவீதம்; சர்வதேச வர்த்தகத்தில், 16 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
22-ஜூன்-202212:34:40 IST Report Abuse
Samathuvan வேனும்னா நம்ம தேவா ஆஸ்திரேலியாவுக்கு போனை போட்டு அப்பாஸ் என்ற சூர்யாவையும் துணைக்கு அழைத்துக்கொண்டு போகலாம்.
Rate this:
Cancel
V Rajasekaran - Chennai,இந்தியா
22-ஜூன்-202210:11:34 IST Report Abuse
V Rajasekaran இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களை நம்புவது தவறு. ஏற்கெனவே அனுபவம் வேறு.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
22-ஜூன்-202204:36:35 IST Report Abuse
MARUTHU PANDIAR நல்ல வேளை பீஜிங்குக்கு நேரில் செல்ல வில்லை.அங்கு சென்றால் அவன் கொடுக்கும் உணவு, தண்ணீர் இவை நமபத் தகுந்ததா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. பிரதமர் நமக்கு விலை மதிப்பில்லா சொத்து என்பது நமக்குத் தான் தெரியும்.
Rate this:
P. SRINIVASALU - chennai,இந்தியா
22-ஜூன்-202210:56:00 IST Report Abuse
P. SRINIVASALU,,,,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X