வீடு தேடி ரேஷன் கார்டு திட்டத்திற்கு அரசு ஒப்புதல்

Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை: புதிய ரேஷன் கார்டுகளை பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் உணவு வழங்கல் துறை சார்பில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு, 'www.tnpds.gov.in 'என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்து, உணவு வழங்கல் உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் ஆய்வு
வீடு தேடி ரேஷன், தமிழக அரசு, ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: புதிய ரேஷன் கார்டுகளை பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் உணவு வழங்கல் துறை சார்பில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு, 'www.tnpds.gov.in 'என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்து, உணவு வழங்கல் உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிப்பர். அச்சிடப்பட்ட கார்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.



latest tamil news

அலுவலகங்களில் வேண்டுமென்றே ரேஷன் கார்டு வழங்க தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டை, பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அத்திட்டத்தை செயல்படுத்த அரசிடம், உணவு வழங்கல் துறை அனுமதி கேட்டது. அதை பரிசீலித்த அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.



அதன்படி, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, அஞ்சலில் அதை பெற விரும்புவோர், அஞ்சல் கட்டணமாக, 25 ரூபாயை இணையதளம் வாயிலாகவே செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு, 20 ரூபாய் கட்டணமும், அஞ்சல் கட்டணத்திற்கு, 25 ரூபாய் என, மொத்தம், 45 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (9)

அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
22-ஜூன்-202215:09:43 IST Report Abuse
அம்பி ஐயர் ஆன் லைனில் விண்ணப்பித்தால் லஞ்சம் வாங்க முடியாது.... அதனாலேயே நிறைய பேருக்கு வேணும்னே ரிஜக்ட் பண்றாங்க....
Rate this:
Cancel
22-ஜூன்-202213:46:50 IST Report Abuse
ஆரூர் ரங் உ.பி ஸ் வருத்தம் என்னன்னா.😇 முக்கியமா சரக்கை டோர் டெலிவ்ரி செஞ்சா நல்லாயிருக்கும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
22-ஜூன்-202211:57:34 IST Report Abuse
raja அப்போ அதிகாரிங்க 450 ரூவா கொடுத்தாதான் போஸ்ட் பண்ணுவானுவோன்னு சொல்லுங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X