திரவுபதி முர்மு... கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்!| Dinamalar

திரவுபதி முர்மு... கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்!

Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (94) | |
பா.ஜ., கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.1958 ஜூன் 20: ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பைதாபோசி கிராமத்தில் பிறந்தார். 'சான்டல்' பழங்குடியினத்தை சேர்ந்தவர்.பி.ஏ., முடித்துள்ளார். தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராகவும், பின் நீர்ப்பாசன துறையில் இளநிலை உதவியாளராகவும் பணியாற்றினார்.1997 : பா.ஜ. வில் சேர்ந்தார்.
Presidential Election, Droupadi Murmu, NDA, presidential candidate

பா.ஜ., கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

1958 ஜூன் 20: ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பைதாபோசி கிராமத்தில் பிறந்தார். 'சான்டல்' பழங்குடியினத்தை சேர்ந்தவர்.பி.ஏ., முடித்துள்ளார். தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராகவும், பின் நீர்ப்பாசன துறையில் இளநிலை உதவியாளராகவும் பணியாற்றினார்.

1997 : பா.ஜ. வில் சேர்ந்தார். ரைராங்பூர் நகரின் கவுன்சிலரானார். மாநில எஸ்.டி., பிரிவின் துணை தலைவரானார்.2000 மார்ச் 6 - 2002 ஆக. 6 : ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராகவும், 2002 - 2004 மே 16 வரை மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.2006 - 2009 : மாநில பா.ஜ., பழங்குடியின பிரிவின் தலைவராக இருந்தார்.2009: இரண்டாவது முறை எம்.எல்.ஏ., ஆனார்.2010 - 2015 : மயூர்பாஞ்ச் மாவட்ட பா.ஜ., தலைவராக இருந்தார்.


latest tamil news


2013 - 2015 : பா.ஜ., எஸ்.டி., பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார்.2015 மே 18 - 2021 ஜூலை 12 : ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னராக பணியாற்றினார்.2022 ஜூன் 21: பா.ஜ., கூட்டணி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வென்றால், நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற பெருமை பெறுவார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X