மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சி குழுவினர் டில்லி வருகை

Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
மேகதாது அணை விவகாரம் குறித்து, தமிழக அனைத்துக்கட்சி தலைவர்கள் குழு, மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை டில்லியில் இன்று சந்தித்து முறையிட உள்ளது.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட, கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதை கட்டக் கூடாதென, தமிழக அரசு பல்வேறு மட்டங்களில் எதிர்ப்பை காட்டி வருகிறது.டில்லியில், வழக்கமாக கூடி, ஆலோசனை மேற்கொள்ளும்
Mekedatu Dam,Karnataka, Cauvery,Mekedatu, TamilNadu

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மேகதாது அணை விவகாரம் குறித்து, தமிழக அனைத்துக்கட்சி தலைவர்கள் குழு, மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை டில்லியில் இன்று சந்தித்து முறையிட உள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட, கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதை கட்டக் கூடாதென, தமிழக அரசு பல்வேறு மட்டங்களில் எதிர்ப்பை காட்டி வருகிறது.டில்லியில், வழக்கமாக கூடி, ஆலோசனை மேற்கொள்ளும் காவிரி ஆணைய கூட்டங்களில், மேகதாது அணை விவகாரத்தை, ஒரு முக்கிய அலுவலாக சேர்ப்பதற்கும், தமிழக அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த பின் அதை கைவிடுவதும் வழக்கமாக இருக்கிறது.

இந்நிலையில், மேகதாது விவகாரத்தை காவிரி ஆணைய கூட்டங்களில் ஆலோசனைக்கு கூட எடுத்துக் கொள்ளக் கூடாததென வலியுறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்திக்க, தமிழக அனைத்துக்கட்சி தலைவர்கள் குழு நேற்று டில்லி வந்துள்ளது.


latest tamil news



நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான இக்குழுவில், டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.பி.,க்கள் தம்பித்துரை, வைகோ, சின்ராஜ், எம்.எல்.ஏ.,க்கள் செல்வ பெருந்தகை, மணி, எஸ்.எஸ். பாலாஜி, நயினார் நாகேந்திரன், ஜெகன் மூர்த்தி, ராமச்சந்திரன், ஜவாஹிருல்லா வேல்முருகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன், தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் இடம்பெற்றுள்ளார். இதற்கிடையில், நாளை நடைபெறுவதாக இருந்த, காவிரி ஆணையக் கூட்டம், தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம், ஜூலை 6 ல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூன்-202213:39:45 IST Report Abuse
ஆரூர் ரங் இன்றுவரை மேட்டூரில் 20 அடிக்கு மேல் தூர் படிந்து அதன் கொள்ளளவே🤔 குறைந்துள்ளது. அதில் படிந்துள்ள பல லட்சம் டன் வண்டல் நல்ல சத்துள்ளது. அதனை அகற்றி விவசாயிகளுக்கு ஊர் ஊராக விநியோக்கலாம். மெக்கே தாடு வின் கொள்ளளவை விட அதிக நீரைத் தேக்கயியலும். தேவையில்லாமல் அண்டை மாநிலங்களுடன் மோதல்😒 வேண்டாமே.
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
22-ஜூன்-202213:08:52 IST Report Abuse
Kalyan Singapore கர்நாடகாவின் காங்கிரஸும் பி ஜெ பியும் ஒன்றாக இணைந்து காவேரி நீர் தமிழகத்தில் எப்படி பாசனத்திற்கு உதவாமல் கடலில் போய் வீணாகிறது என்ற பல விடியோக்கள் தயாரித்திருக்கிறார்கள் இதை அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் செய்வார்கள். பொது நலம் என்னும்போது எல்லா கட்சிகளும் கர்நாடகாவில் ஒன்றாக இணைந்து விடுகின்றன. தமிழகத்தில் அந்த ஒற்றுமை இல்லை நீ பெரிதா நான் பெரிதா என்ற போட்டியே உள்ளது.
Rate this:
Cancel
... - ,
22-ஜூன்-202210:34:50 IST Report Abuse
... இவனுங்களும் அணை கட்ட மாட்டாங்க... அடுத்தவனையும் அணை கட்ட விடமாட்டான்க... காவிரி தண்ணீர் தந்தே ஆகணும்ன்னு போராட்டம் பண்ணுவானுங்க... கேட்டா திராவிட மாடல்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X