அரசு பஸ்களை எரித்தவர்களிடம் நஷ்டத்தை வசூலிக்க நடவடிக்கை

Updated : ஜூன் 22, 2022 | Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (40) | |
Advertisement
வாரணாசி: ராணுவத்தின் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட சேதத்துக்காக, போராட்டம் நடத்தியவர்களிடம் இருந்து நஷ்டத்தை வசூலிக்க உத்தர பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.சமீபத்தில், முப்படையில் அக்னிபத் என்ற புதிய வேலை வாய்ப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு உ.பி., உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
Agnipath protests, UP govt, protesters, recover, damages

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாரணாசி: ராணுவத்தின் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட சேதத்துக்காக, போராட்டம் நடத்தியவர்களிடம் இருந்து நஷ்டத்தை வசூலிக்க உத்தர பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபத்தில், முப்படையில் அக்னிபத் என்ற புதிய வேலை வாய்ப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு உ.பி., உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் ரயில், பஸ்களை தீயிட்டு கொளுத்தினர். ஏராளமான பொதுச்சொத்துக்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இந்நிலையில், இந்த சேதத்துக்கான தொகையை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.


latest tamil news


இது பற்றி வாரணாசி மாவட்ட கலெக்டர் கவுஷல் ராஜ் சர்மா கூறியதாவது: வாரணாசி மாவட்டத்தில் ஜூன் 17ம் தேதி போராட்டக்காரர்கள் 36 பஸ்களை எரித்துள்ளனர். இதனால் அரசுக்கு, 12.97 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. சேதத்தொகையை அவர்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ்களை எரித்த 27 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடைய புகைப்படங்களும், 'வீடியோ' ஆதாரங்களும் பிரயாக்ராஜ் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
22-ஜூன்-202220:17:58 IST Report Abuse
pattikkaattaan திருட்டு திராவிட நாட்டில் பஸ்ஸாே ரயிலாே எரிக்கப்படவில்லை. ராம ராஜ்ஜியத்தில் இப்படி நடக்கிறதே என்று கவலையாக உள்ளது.
Rate this:
Shankar - Hawally,குவைத்
22-ஜூன்-202220:59:37 IST Report Abuse
Shankar..............
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூன்-202216:54:22 IST Report Abuse
ram அரசு சொத்துக்களை தீங்கு விளைவிப்பவன் மற்றும் அரசு வேலையில் இருந்து லஞ்சம் வாங்குபவன் இவன்களது தவறுகளை உண்மை எனை தெரிந்ததும் இவன்களோட மொத்த சொத்துக்களையும் அரசுடமையாக்கனும்.
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
22-ஜூன்-202216:49:33 IST Report Abuse
Manguni ஒரு அஞ்சு புல்லடோசேரை தமிழ்நாட்டுக்கு அனுப்புங்க.. திருட்டு ரயில் கும்பல் ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் ஈடுபடுது (முக்கியமா கோவில் நிலம், அரசு நிலம்).... நிலத்தோட சேர்ந்து திருட்டு திராவிட கட்சியினரையும் நசுக்குங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X