மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம்? பொதுமக்கள் புகாரும்... போலீஸ் ரியாக்ஷனும்

Updated : ஜூன் 22, 2022 | Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
கடந்த ஞாயிறு (ஜூன் 19) மாலை, 4 மணி. பேரூரிலிருந்து, 'தினமலர்' அலுவலகத்தை போனில் தொடர்பு கொண்டு, தன்னார்வலர் ஒருவர் தெரிவித்த தகவல் திடுக்கிடச் செய்தது.'நாங்கள் வசிக்கும் ஏரியா தீத்திபாளையத்தில், தனியார் ஒருவருக்குச் சொந்தமான உபயோகமற்ற பாழடைந்த கட்டடம் உள்ளது. அங்கு, மனநலம் பாதித்த இளம்பெண் பல மாதங்களாக பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டு வருவதாக சந்தேகமுள்ளது. உடன், ஒரு

டந்த ஞாயிறு (ஜூன் 19) மாலை, 4 மணி. பேரூரிலிருந்து, 'தினமலர்' அலுவலகத்தை போனில் தொடர்பு கொண்டு, தன்னார்வலர் ஒருவர் தெரிவித்த தகவல் திடுக்கிடச் செய்தது.'நாங்கள் வசிக்கும் ஏரியா தீத்திபாளையத்தில், தனியார் ஒருவருக்குச் சொந்தமான உபயோகமற்ற பாழடைந்த கட்டடம் உள்ளது. அங்கு, மனநலம் பாதித்த இளம்பெண் பல மாதங்களாக பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டு வருவதாக சந்தேகமுள்ளது. உடன், ஒரு ஆணும் இருக்கிறார். அவரே இதற்கு காரணம்' எனக்கூறியவர், தமது விவரத்தை வெளியிட வேண்டாமென ஒரு விதமான பதற்றத்துடன் பேசினார்.latest tamil news
நிருபர் குழு நேரடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தது. அங்கு, போனில் தெரிவித்த நபரின் தகவல்கள் அனைத்தும், அவ்வாறே, காட்சியாக கண் முன் வந்து சாட்சியம் அளித்தன. ஆம்,பாழடைந்த கட்டடமும் இருந்தது. மனநலம் பாதித்தவரைப் போன்ற தோற்றத்துடன், மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரும், உடன் ஆண் ஒருவரும் இருந்தார். நேரில் கண்ட காட்சிகள் சந்தேகப்படும்படியாகவே இருந்தன. அருகிலிருந்த பொதுமக்களிடம் விசாரித்தபோது, அக்கிரமத்தின் உச்சம் அம்பலமானது.


எஸ்.பி.,க்கு தகவல்


கிடைத்த முதற்கட்ட அதிர்ச்சி தகவல்களை கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணனுக்கு தெரிவித்தோம். அவர், எவ்வித ரியாக்ஷனும் பெரிய அளவில் காட்டாமல், 'சரி, போலீஸ் அனுப்பி விசாரிக்கிறேன்' எனக்கூறி இணைப்பை துண்டித்துக்கொண்டார்; அப்போது நேரம், மாலை 5:38 மணி. போலீசார் வருவார்கள்... அதிரடி நடவடிக்கையில் இறங்கி அப்பெண்ணை மீட்பார்கள்... என, காத்திருந்த கிராமத்தினருக்கும், நமது நிருபர் குழுவுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது; போலீஸ் தரப்பில் உடனடி ஆக்ஷன் இல்லை.

நமது குழுவினரே, கிராமத்தினர் உதவியுடன், அப்பெண்ணுடன் இருந்த நபரிடம் பேச்சுக்கொடுத்தனர். சில விவரங்கள் கிடைத்தன. உடனிருக்கும் பெண் தன் மகள் என்றும், தான் தந்தை என்றும் அந்நபர் தெரிவித்தார். ஆனாலும், அவரது மனைவி குறித்தோ, பாழடைந்த வீட்டில் பதுங்கியிருப்பது பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, பேரூர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பெண் போலீஸ் ஒருவர், நமது நிருபரை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

'அங்கிருக்கும் பெண்ணுக்கு வயது 27. அவர் ஒன்றும் மைனர் அல்ல. அவரது தந்தையே முறை தவறிய உறவுக்கு பயன்படுத்தி வருவதாக கூறுகின்றனர்; உங்களுக்குத் தெரியுமா?' என, ஆத்திரமுடன் கேள்வி எழுப்பினார்.

ஆனால் அவர் 'ஸ்பாட்'டிற்கு வரவில்லை (ஆம், எஸ்.பி.,யிடம் நேரடியாக தெரிவித்த தகவலுக்கே இந்த நிலை என்றால்... பேரூர் போலீசாரிடம் நேரடியாக கூறியிருந்தால் 'விசாரணை எந்த மாதிரியாக இருந்திருக்கும்' என்பதை, வாசகர்களின் யூகத்துக்கே விட்டு விடலாம்).மணி, 6.20. சம்பவ இடத்துக்கு போலீசார் இருவர் சாவகாசமாக வந்து சேர்ந்தனர். அவர்கள் அதிகாரிகள் அல்ல. பாழடைந்த கட்டடத்திலிருந்த பெண்ணையும், ஆணையும் பார்வையிட்டு விட்டு உடனே சென்று விட்டனர்; அப்பெண், மீட்கப்படவில்லை. அருகிலுள்ள கிராமத்தினரிடம் விசாரணையும் நடத்தவில்லை.


latest tamil news

அலட்சியம் ஆபத்து


எந்த ஒரு குற்றத்தையும் அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுத்தால் மட்டுமே பெரிய அளவில் குற்றங்கள் நிகழாமல் தவிர்க்க முடியும். அதற்கு பொதுமக்களின் ரகசிய தகவல்கள் மற்றும் புகார்களின் மீது போலீசார் துரித நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். ஆனால், மக்கள் சார்பில் தகவல் தெரிவித்தும் 'சீரியஸாக' கையாளாத எஸ்.பி.,யின் வேகத்தையும், 'ஸ்பாட்டிற்கே' வராத போலீஸ் அதிகாரிகளின் அலட்சிய போக்கையும் கவனிக்கும் போது, பொள்ளாச்சி சம்பவமே, கண்முன் வந்து நிற்கிறது.

தற்போதைய தமிழக டி.ஜி.பி.,சைலேந்திரபாபு, 2010ல் கோவை போலீஸ் கமிஷனராக இருந்தபோதுதான் ஒரு அதிரடி 'என்கவுன்டர்' நடந்தது. பள்ளிக்குச் சென்ற பச்சிளம் பிஞ்சுகளைக் கடத்தி பாலியல் வக்கிரம் செய்தவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அப்படிப்பட்ட அதிகாரிதான், தற்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறைக்கே தலைமை வகிக்கிறார்.

பொதுமக்களின் புகார் மீது துரித நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, தினமும் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருக்கிறார். அதற்கு மாறாக இருக்கிறது கோவை மாவட்ட போலீசாரின் அணுகுமுறை. இப்படியே போனால் அரசுக்கு அவப்பெயரே மிஞ்சும்; அதைத்தானா, எதிர்பார்க்கிறது கோவை மாவட்ட போலீஸ்?


போலீஸ் செய்திருக்க வேண்டியது என்ன?ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஒருவர் கூறியதாவது:கிடைக்கப்பெறும் தகவல், அதன் தன்மையைப் பொறுத்து 'ஸ்பாட்'டிற்கு இன்ஸ்பெக்டர் செல்ல வேண்டுமா, டி.எஸ்.பி., செல்ல வேண்டுமா, அல்லது எஸ்.பி.,யே செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம். பேரூர் கிராமத்தினரின் புகாரை, மாவட்ட எஸ்.பி., மிக அலட்சியமாக கையாண்டிருப்பதாகவே தெரிகிறது. கிடைத்த தகவல் உண்மையா, பொய்யா என்பதை உட்கார்ந்த இடத்திலிருந்தே முடிவு செய்ய முடியாது.

'ஸ்பாட்'டிற்கு உடனடியாக போலீஸ் டீமை அனுப்பியிருக்க வேண்டும்; அதில் பெண் இன்ஸ்பெக்டர், ஆண் இன்ஸ்பெக்டரும் இருக்க வேண்டும். மனநலம் பாதித்ததாக கூறப்படும் பெண்ணையும், உடனிருந்த நபரையும் விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆரம்பகட்ட விசாரணையில் சந்தேகம் இருப்பின், அப்பெண்ணை உரிய சட்ட விதிமுறைகளின்படி மீட்டு மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தி அறிக்கை பெற்றிருக்க வேண்டும்; விசாரணை முடியும் வரை காப்பகத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும்.

அப்பெண்ணின் வயது மற்றும் குழந்தைப்பேறு, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவ அறிக்கையில் விடை கிடைக்கும். உடனிருக்கும் நபரிடமும் விசாரணை நடத்துவது அவசியம். அந்நபர் தந்தையாகவே இருப்பினும், மகளுக்கு பாலியல் ரீதியான தீங்கு செய்திருந்தால் கைது செய்து சிறையில் அடைக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


அதிரடி காட்டுவாரா கலெக்டர் சமீரன்சம்பந்தப்பட்ட பெண் குறித்து அக்கம் பக்கம் விசாரித்தோம். பெயர் வெளியிட விரும்பாத அந்த கிராமப் பெண் ஒருவர் கூறுகையில், 'மனநலம் பாதித்தவராக இருக்கும் அந்த பெண்ணின் சொந்த ஊர் கிணத்துக்கடவு; உடனிருப்பவர் தந்தை என்கிறார்கள்; உறுதியாக தெரியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் அந்த பாழடைந்த கட்டடத்தின் அருகே, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. நாங்கள் சென்று பார்த்தோம்.

அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. தொப்புள் கொடியைக்கூட உடனிருந்த நபரே வெட்டி எடுத்திருந்தார். அருகில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தோர் ஆம்புலன்ஸ் வரவழைத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கு முன் அந்த பெண்ணுக்கு இரு குழந்தைகள் பிறந்துள்ளன. ஒருமுறை பேரூர் போலீசார் வந்து விசாரித்துவிட்டு சென்றனர். அதன்பிறகு அப்படியே விட்டுவிட்டனர். அந்த பெண்ணை எப்படியாவது காப்பாற்றுங்கள். தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித்தாருங்கள்' என்றார்.

மனநலம் பாதித்தவரைப் போன்று காணப்படும் பெண்ணுக்கு, 3 குழந்தைகள் பிறந்திருந்ததாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். அந்த குழந்தைகள் எங்கே என தெரியவில்லை. விற்கப்பட்டுவிட்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். உண்மையைக்கண்டறிய மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட வேண்டும். சிறப்பு குழுவை அனுப்பி மீட்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சையும், நீதியும் கிடைக்கச் செய்ய வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே, அந்த கிராமத்தினரின் எதிர்பார்ப்பு. எஸ்.பி.,தான்கண்டுகொள்ளவில்லை; கலெக்டராவது நடவடிக்கை எடுப்பாரா?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
22-ஜூன்-202219:41:31 IST Report Abuse
sridhar நடப்பது திராவிட அரசு , புகார் ஈ வே ரா போன்றவர் மேல். போலீஸ் எப்படி நடவடிக்கை எடுக்கும். ஏதாவது விருது / பட்டம் கொடுக்காதவரை சந்தோசம்.
Rate this:
Cancel
22-ஜூன்-202218:21:24 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் நமக்கென்ன என்று அக்கம்பக்கத்தார் பேசாமல் இருந்துவிட்டார்கள் என்று தெரிகிறது .......... இது சமூகத்தில் புரையோடிப்போன பொறுப்பின்மை .........
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-ஜூன்-202218:05:24 IST Report Abuse
Natarajan Ramanathan ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X