அதிகாரிகளின் வீடுகளில் 'ஆர்டர்லி': திரும்பப் பெற ஐகோர்ட் அறிவுரை

Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை : உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் 'ஆர்டர்லி'களை திரும்ப பெறும்படி, சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.போலீஸ் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்ய, மாணிக்கவேல் என்ற அதிகாரிக்கு அனுப்பியநோட்டீசை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இம்மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: போலீஸ் துறையில்,
orderly, High Court, police

சென்னை : உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் 'ஆர்டர்லி'களை திரும்ப பெறும்படி, சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

போலீஸ் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்ய, மாணிக்கவேல் என்ற அதிகாரிக்கு அனுப்பியநோட்டீசை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இம்மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: போலீஸ் துறையில், உயர் அதிகாரிகள் மத்தியிலேயே ஒழுங்கை பேண முடியாத போது, எப்படி மற்றவர்களை கட்டுப்படுத்த முடியும்?

அலுவலக வாகனங்களில், கருப்பு 'ஸ்டிக்கர்' பயன்படுத்துவது; தனி வாகனங்களில் துறையின் பெயரை தவறாக பயன்படுத்துவது; வீட்டு வேலைகளில் போலீசாரை ஈடுபடுத்துவது போன்ற குற்றச்சாட்டுக்களில், அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.


latest tamil news


போலீஸ் உயர் அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதைக் கட்டுப்படுத்த, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; போலீஸ் துறையில் ஒழுக்கத்தை பேண வேண்டும். அரசு இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் ஆஜராகி, ''ஆர்டர்லி முறை தொடர்பாக, டி.ஜி.பி.,க்கு, உள்துறைச் செயலர் கடிதம் அனுப்பி உள்ளார். உயர் அதிகாரிகளுடன், முதல்வரும் ஆலோசனை நடத்தி உள்ளார். அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

அப்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியதாவது: போலீஸ் பணி என்ற கனவில் பயிற்சி முடித்து, மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுபவர்களை, அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்வதற்காக, ஆர்டர்லிகளாக பயன்படுத்துவது, சட்டப்படி குற்றம்.ஆர்டர்லி வைத்திருக்கும் அதிகாரிகள் யாராக இருந்தாலும், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை திரும்பப் பெற வேண்டும்.

அரசியல்வாதிகளும், போலீசாரும் கூட்டு சேர்ந்து இயங்கினால், அது அழிவுக்கு வழிவகுக்கும். போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் கருப்பு ஸ்டிக்கரை அகற்றாமல் இருப்பதை, என்னவென்று கூறுவது? இவ்வாறு நீதிபதி கூறினார்.விசாரணையை, ஜூலை 25க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhu - Trichy,இந்தியா
22-ஜூன்-202221:57:04 IST Report Abuse
 Madhu நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்... அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் காவல் துறையில் பணி புரியும் காவலர்களைத் தங்கள் வீட்டு வேலைக்குப் பயன்படுத்துகிறார்களாம். இது இன்று நேற்றல்ல பல காலமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நீதி மன்றம் அரசுக்கு இப்போது அறிவுரை வழங்குகிறது. சற்று தள்ளி.. இந்த 'அக்னிபத்' விவரத்திற்கு வருவோம்... தமிழகத்தை சேர்ந்த ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் கழகத் தலைவர்கள் என்ன பேசினார்கள் தெரியுமா? ராணுவத்தில் சேர்ந்தால் நீங்கள் அடியாட்களாகவும், முடி வெட்டவும், சலவை செய்யவும், செருப்பு தைக்கவும், பக்கோடா போடவும்தான் கற்றுக் கொள்வீர்கள் என்கிறார்கள்... இதற்கு உள்ளூர ஆனால் வெளியே சொல்லாமல் இவர்கள் ஒத்துக் கொள்ளும் விஷயம் தாங்கள் முன்பே காவல்துறையை சேர்ந்த பணியில் இருக்கும் காவலர்களை தங்கள் சொந்த வீட்டு வேலைகளுக்காகத்தான் உபயோகிக்கிறோம் என்பதே. 4 ஆண்டு காலம் 'அக்னிபத்'தில் பணி புரிந்து விட்டு ராணுவத்தில் சேராமல் வெளியே வரப்போகும் 75 சதவிகிதத்தினரை இவர்கள்தான் முதலில் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கப் போகிறார்கள். 'அக்னிவீரர்களுக்கு' முன்னுரிமை எங்கள் கட்சியில் வழங்கப்படும் என விளம்பரம் கூடக் கொடுப்பார்கள் என நம்பலாம்.
Rate this:
Cancel
SIVA - chennai,இந்தியா
22-ஜூன்-202220:04:53 IST Report Abuse
SIVA அது என்ன அறிவுரை அறிவு இல்லாதவங்களுக்கு சொல்லலாம் , ஒண்ணுமே புரியல
Rate this:
Cancel
jay - toronto,கனடா
22-ஜூன்-202217:43:30 IST Report Abuse
jay நெத்தியடி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X