ஆப்கனில் பயங்கர பூகம்பம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

Updated : ஜூன் 22, 2022 | Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
காபூல்: ஆப்கனின் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.ஆப்கனின் கிழக்கு பகுதியில் உள்ள பக்டிகா மாகாணத்தில் ரிக்டரில் 6 என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 1:30 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறித்த மீட்பு படையினர் சம்பவ
Afghanistan, earthquake, kill, people

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காபூல்: ஆப்கனின் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.



ஆப்கனின் கிழக்கு பகுதியில் உள்ள பக்டிகா மாகாணத்தில் ரிக்டரில் 6 என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 1:30 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறித்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி உள்ளதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல வெளியேறிவிட்டனர். இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அனைத்து தொண்டு நிறுவனங்களும் உதவி செய்யும்படி தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


latest tamil news



ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கம் இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாகாணத்திலும் உணரப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதேநேரத்தில் ஐரோப்பிய புவியியல் மையம், பூகம்பத்தை தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகள், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கனில் உணரப்பட்டதாகவும், பூகம்பம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 500 கி.மீ., சுற்றளவுக்கு உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Sudarsanam - North Carolina,யூ.எஸ்.ஏ
22-ஜூன்-202223:29:57 IST Report Abuse
Raj Sudarsanam எல்லா நாடும், எல்லா மதமும் உடனடியாக செய்ய வேண்டியது - "மக்கள் தொகை கட்டுப்பாடு" அடுத்த 50 வருடங்களுக்கு...
Rate this:
Cancel
sunny raja -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூன்-202220:03:51 IST Report Abuse
sunny raja ரபி பயங்கரமா கனவு காண்பார் போலிருக்ககே! இல்லை புத்தி பிசகிடுச்சோ? கன்னா பின்னான்னு உளறுகிறாரே!
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
22-ஜூன்-202216:18:24 IST Report Abuse
Vena Suna அனைவரும் தர்மத்தோடு வாழுங்கள்.பூகம்பங்கள் வராமல் இருக்க அது உதவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X