வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம். பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு , இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுக்குழு நாளை நடைபெற உள்ள நிலையில், ஒற்றை தலைமை பிரச்னை பெரிதாகி உள்ளது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் அளித்த மனுவை ஏற்க ஆவடி போலீசார் மறுத்து விட்டனர்.
இந்நிலையில், பன்னீர்செல்வத்திற்கு எழுதிய கடிதத்தில் பழனிசாமி கூறியுள்ளதாவது: பொதுக்குழுவுக்கு வாருங்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு அசாதாரண சூழல் இல்லை. திட்டமிட்டபடி பொதுக்குழு , செயற்குழு நடக்கும். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவுக்கு அழைத்தது போல், பங்கேற்போம் எனக்கூறியுள்ளார்.
ஒப்புதல் கடிதம்
இதனிடையே, அ.தி.மு.க.,வில் 2,625 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 120 பேரை தவிர 2505 பேரின் ஒப்புதல் கடிதங்களை பழனிசாமி தரப்பு பெற்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE