அ.தி.மு.க.,பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்தது உயர்நீதிமன்றம்

Updated : ஜூன் 22, 2022 | Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: நாளை நடைபெற உள்ள அ.தி.மு.க.,வின் பொது குழு கூட்டத்திற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது. அ.தி.மு.க.,பொது குழுவை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என சண்முகம் சுரேன்,ராம் குமார் ஆதித்தன் உள்ளிட்டோரும் பொது குழுவை நடத்த தடை விதிக்க கூடாது என ஈ.பி.எஸ் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி வந்தன. இருதரப்பு வாதங்களும்

சென்னை: நாளை நடைபெற உள்ள அ.தி.மு.க.,வின் பொது குழு கூட்டத்திற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது.



latest tamil news


பொதுக்குழுவுக்கு ஐகோர்ட் ஓகே ஓபிஎஸ் பதவி பறிப்பு உறுதி


அ.தி.மு.க.,பொது குழுவை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என சண்முகம் சுரேன்,ராம் குமார் ஆதித்தன் உள்ளிட்டோரும் பொது குழுவை நடத்த தடை விதிக்க கூடாது என ஈ.பி.எஸ் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி வந்தன. இருதரப்பு வாதங்களும் இன்று மாலை 3 மணி முதல் நடைபெற்று வந்தன. விசாரணை க்கு பின்னர் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நீதிபதி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது: சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை (ஜூன் 23) அ.தி.மு.க.,பொது குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் தீர்மானம் தொடர்பாக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தீர்மானம் கொண்டுவரவோ புதிய தீர்மானம் கொண்டு வரவோ தடை இல்லை. கட்சி விதிகளை திருத்தும் நடைமுறையில் நீதிமன்றம் தலையிட முடியாது. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது கட்சி தான். . நிர்வாக வசதிக்காக சட்டதிட்டங்களை கட்சியால் திருத்தம் செய்யமுடியும்.


பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது. பொதுக்குழு நடத்த கூடாது என யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனவே அ.தி.மு.க., பொது குழுவை நடத்தலாம் . இவ்வாறு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி என உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்., பொள்ளாச்சி ஜெயராமன், பொன்னையன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.



தர்மம் வென்றது


முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது, பொதுக்குழு கூட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தர்மம் வென்றுள்ளது . பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் சிறப்பாக நிறைவேற்றப்படும் இவ்வாறு அவர் கூறினார்.



ஒ.பி.எஸ். ஆலோசனை


பொதுக்குழு நடத்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.



முன்னதாக பொதுகுழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்கள் குறித்த நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news




திட்டமிட்டபடி பொதுக்குழு


தொடர்ந்து ஈ.பிஎஸ் தரப்பு வழககறிஞர் கூறுகையில் எதிர்தரப்பினர் தொடர்ந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். எனவே திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
22-ஜூன்-202223:10:07 IST Report Abuse
Kalyan Singapore வாழ்க்கை முழுதும் குழப்பத்திலேயே காலத்தை ஓட்டுபவர் பன்னீர் செல்வம். ஜெயலலிதா இருக்கும்போதே அவருடைய எரிச்சலுக்கு பாத்திரமானவர் (தங்க தமிழ் செல்வன் பெயர் அடிபட்டதும் அப்போது தான்) இப்போது சசிகலா, (அவரை முதலில் எதிர்த்தவரும் பன்னீர் செல்வம் தான்) தி மு க, (மகனுக்காக), பி ஜே பி (சசிகலாவுக்காக) துணை தேடி இரண்டு மூன்று குதிரைகளில் சவாரி செய்கிறார். ஒரே குதிரையில் சவாரி செய்யும் இ பி ஸ் போட்டியில் எளிதாக வென்று விடுவார். பன்னீர் செல்வம் சவாரி செய்யும் மூன்று குதிரைகளின் திசையும் வெவ்வேறாக இருப்பதால் இவர் இங்கயே விழுந்து கிடந்திரருப்பார். செல்ல வேண்டிய இடத்துக்கு (அது தவறானதாக இருந்தாலும் பிறகு திசை மாற்றிக்கொள்ளலாம்) இ பி ஸ் சவாரி செய்யும் குதிரை ( அ தி மு க) நிச்சயமாகவும் விரைவாகவும் செல்லும்.
Rate this:
Cancel
Anand - Toronto,கனடா
22-ஜூன்-202222:38:53 IST Report Abuse
Anand ஹ்ம்ம், இப்ப மட்டும் கருணாநிதி இருந்திருந்தால், அ தி மு க சின்னா பின்னம் ஆகி இருக்கும். மு க ஸ்டாலின் வேஸ்ட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X