சென்னை: நாளை நடைபெற உள்ள அ.தி.மு.க.,வின் பொது குழு கூட்டத்திற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது.
![]()
|
அ.தி.மு.க.,பொது குழுவை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என சண்முகம் சுரேன்,ராம் குமார் ஆதித்தன் உள்ளிட்டோரும் பொது குழுவை நடத்த தடை விதிக்க கூடாது என ஈ.பி.எஸ் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி வந்தன. இருதரப்பு வாதங்களும் இன்று மாலை 3 மணி முதல் நடைபெற்று வந்தன. விசாரணை க்கு பின்னர் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நீதிபதி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது: சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை (ஜூன் 23) அ.தி.மு.க.,பொது குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் தீர்மானம் தொடர்பாக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தீர்மானம் கொண்டுவரவோ புதிய தீர்மானம் கொண்டு வரவோ தடை இல்லை. கட்சி விதிகளை திருத்தும் நடைமுறையில் நீதிமன்றம் தலையிட முடியாது. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது கட்சி தான். . நிர்வாக வசதிக்காக சட்டதிட்டங்களை கட்சியால் திருத்தம் செய்யமுடியும்.
பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது. பொதுக்குழு நடத்த கூடாது என யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனவே அ.தி.மு.க., பொது குழுவை நடத்தலாம் . இவ்வாறு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி என உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்., பொள்ளாச்சி ஜெயராமன், பொன்னையன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
தர்மம் வென்றது
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது, பொதுக்குழு கூட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தர்மம் வென்றுள்ளது . பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் சிறப்பாக நிறைவேற்றப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
ஒ.பி.எஸ். ஆலோசனை
பொதுக்குழு நடத்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக பொதுகுழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்கள் குறித்த நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
![]()
|
திட்டமிட்டபடி பொதுக்குழு
தொடர்ந்து ஈ.பிஎஸ் தரப்பு வழககறிஞர் கூறுகையில் எதிர்தரப்பினர் தொடர்ந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். எனவே திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.