40 ஆண்டுகளில் இல்லாத பிரிட்டனின் பணவீக்க உயர்வு

Added : ஜூன் 22, 2022 | |
Advertisement
புதுடில்லி:கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பிரிட்டனின் பணவீக்கம், கடந்த மே மாதத்தில் அதிகரித்து உள்ளது.ஏப்ரல் மாதத்தில் 9.0 சதவீதமாக இருந்த பிரிட்டனின் பணவீக்கம், மே மாதத்தில் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 1982ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அதிகபட்ச பணவீக்க உயர்வாகும் என, பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.எரிபொருள் விலை அதிகரிப்பால்,
40 ஆண்டுகளில் இல்லாத பிரிட்டனின் பணவீக்க உயர்வு

புதுடில்லி:கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பிரிட்டனின் பணவீக்கம், கடந்த மே மாதத்தில் அதிகரித்து உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 9.0 சதவீதமாக இருந்த பிரிட்டனின் பணவீக்கம், மே மாதத்தில் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 1982ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அதிகபட்ச பணவீக்க உயர்வாகும் என, பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.எரிபொருள் விலை அதிகரிப்பால், பிரிட்டனின் பணவீக்கம் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக 11 சதவீதத்தை எட்டக்கூடும் என எச்சரித்துள்ளது, பேங்க் ஆப் இங்கிலாந்து.
மே மாத பணவீக்க உயர்வுக்கு, உணவுப் பொருட்கள் விலை மற்றும் பெட்ரோல் விலை அதிகரித்தது காரணமாக அமைந்துவிட்டது. பணவீக்கம் அதிகரிக்கும்பட்சத்தில் அதை கட்டுக்குள் கொண்டுவர, மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்துவது வாடிக்கை.அந்த வகையில், பேங்க் ஆப் இங்கிலாந்து, கடந்த டிசம்பரிலிருந்து இதுவரை, ஐந்து முறை வட்டிவிகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X