புதுடில்லி:ஐ.டி.சி., நிறுவனத்தில், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை, 220 ஆக உயர்ந்துள்ளது.
கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு நுகர்பொருட்கள், ஹோட்டல், மென்பொருள் என கிட்டத்தட்ட 13 வகையான வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது, ஐ.டி.சி., நிறுவனம். மேலும், தன்னுடைய தயாரிப்புகளை 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டு நிலவரப்படி 220 ஆக உயர்ந்துள்ளது. இது, கிட்டத்தட்ட 44 சதவீத உயர்வாகும்.மாதம் 8.5 லட்சம் ரூபாய் அல்லது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நபர்கள் எண்ணிக்கை, கடந்த 2020-21 நிதியாண்டில் 153 ஆக இருந்தது, கடந்த நிதியாண்டில் 220 ஆக அதிகரித்து உள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான சஞ்சீவ் பூரியின் சம்பளம் 5.35 சதவீதம் அதிகரித்து, 12.59 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இவரது ஊதியம் 11.95 கோடி ரூபாயாக இருந்தது.ஐ.டி.சி., நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை, கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 23 ஆயிரத்து 829. நிரந்தரம் செய்யப்பட்ட இந்த ஊழியர்கள் தவிர, மேலும் 25 ஆயிரத்து 513 ஊழியர்களும் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE