நிதி சிக்கலில் சிக்கிய மாநிலங்கள் ரிசர்வ் வங்கி பட்டியல் வெளியீடு

Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மும்பை:பீஹார், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்கள், நிதி ரீதியாக மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை அடுத்து, இந்தியாவில் மாநிலங்களின் நிதி நிலைமைகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து ஆய்வு ஒன்றை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.அதில் பீஹார், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான்,
நிதி சிக்கலில் சிக்கிய மாநிலங்கள் ரிசர்வ் வங்கி பட்டியல் வெளியீடு

மும்பை:பீஹார், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்கள், நிதி ரீதியாக மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை அடுத்து, இந்தியாவில் மாநிலங்களின் நிதி நிலைமைகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து ஆய்வு ஒன்றை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.அதில் பீஹார், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்கள், கொரோனா தொற்று பரவலை அடுத்து, நிதி ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ரொக்க மானியங்களை வழங்குதல், இலவச பயன்பாட்டு சேவைகளை வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை புதுப்பித்தல் மற்றும் மறைமுகமான மற்றும் வெளிப்படையான உத்தரவாதங்களை நீட்டித்தல் ஆகியவை, மாநிலங்களை மிகவும் சிக்கலில் ஆழ்த்துவதாக உள்ளன.மேலும், மாநிலங்கள் தங்களுடைய கடன் நிலையை சரிசெய்வதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, மேற்குவங்கம், பீஹார், ஆந்திரா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்கள், நாட்டில் அதிக கடன் சுமையுடன் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.வரி வருவாயில் மந்தநிலை, செலவினங்கள் அதிகரிப்பு, உயரும் மானியச் சுமை ஆகியவை, மாநில அரசுகளின் நிதி சுமை அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-ஜூன்-202213:30:26 IST Report Abuse
Krishnamurthy Venkatesan மாநிலங்கள் தன்னிச்சையாக வெளி நாடுகள்/ஐக்கிய நாடுகள் போன்றவற்றிலிருந்து கடன் பெறுவதை தடை செய்ய வேண்டும். இத்தகைய கடன்கள் இலவசங்களுக்கு செலவிடப்படுகின்றன அல்லது இலவசங்களுக்கு செலவிட்டதால் பொதுமக்கள் சேவைக்கு கடன்கள் பெறப்படுகின்றன. மத்திய அரசு கடிவாளம் போட வேண்டும்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
23-ஜூன்-202212:36:05 IST Report Abuse
Suppan மக்கள் பணத்தில் இலவசங்களைக் கொடுத்து ஒட்டு வேட்டையாட முயலும் கட்சிகள் திருந்துவார்களா? வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு மேல் இலவசங்கள் வழங்கக்கூடாது. இலவசங்கள் தேவைப்பட்டோருக்கு (ஏழ்மை நிலைக்கு கீழே உள்ளோருக்கு மட்டுமே அதுவும் அத்தியாவசிய பண்டங்களுக்கு மட்டுமே) மட்டுமே ஆசைப்படுவோருக்கு அல்ல என்பதை அறிவிக்க வேண்டும்.
Rate this:
Cancel
v.subramanian - madurai,இந்தியா
23-ஜூன்-202212:32:04 IST Report Abuse
v.subramanian நேற்றைய நாளிததில் 4.5 lakhs பணியிடங்கள் அரசு துறையில் காலியாக இருப்பதாய் படித்தேன் திரு. Rajarajan சொல்லியதுபோல் தொகுப்பு ஊழியரை தனியார் அமைப்புகள் மூலம் செயல்படுத்த வேண்டும். அதுதான் இப்போதைய சூழ்நிலைக்கு சரியானது. அரசு ஊழியர்களுக்கு old pension scheme அமுல்படுத்தினால் அரசு திவால் ஆகிவிடும். old pension scheme கேட்பவர்களுக்கு அவர்கள் சம்பளத்தை old scale கு மாற்றி புதிய சம்பளம் என்றிலிருந்து கொடுத்தார்களோ அதை கணக்கிட்டு old சம்பளத்திற்கு மாற்றி அதிகம் வழங்கியதை பிடித்துகொண்டு old pension scheme அமுல்படுத்தவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X