காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வணிகர் வீதியில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போருக்கு, பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாய் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள், வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வணிகர் வீதியில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வணிகர் வீதி பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.