வாலாஜாபாத்:வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில், 12 லட்ச ரூபாய் செலவில், 'டிஜிட்டல் எக்ஸ்ரே' இயந்திரம் பயன்பாட்டிற்கு எம்.பி., துவக்கி வைத்தார்.வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில், வாலாஜாபாத் அரசு மருத்துவமனை உள்ளது.
இங்கு,12 லட்ச ரூபாய் செலவில், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்டு உள்ளது. பொது மக்களின் பயன்பாட்டிற்கு, துவக்கி வைக்கப்பட்டது.இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவமனை இணை இயக்குனர் ஜீவா தலைமை வகித்தார். காஞ்சிபுரம் எம்,பி, செல்வம் மற்றும் உத்திரமேரூர் எம்.எல்,ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்று, எக்ஸ்ரே இயந்திரத்தை துவக்கிவைத்தார். வாலாஜாபாத் ஒன்றிய சேர்மன் தேவேந்திரன் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.