வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் சார்பில், விவசாயிகளுக்கு மின் சிக்கனம் மற்றும் மின் திறன் விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
கூடுதல் தலைமை பொறியாளர் சண்முகம் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். சூரிய சக்தி மேம்பாடு திட்டம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து, உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் மின் மோட்டார்களுக்கு, மின் தேக்கி பொருத்துவது; வைண்டிங் செய்யப்பட்ட மின் மோட்டார் தவிர்ப்பது உள்ளிட்ட பல வித ஆலோசனைகள் வழங்கினார். மின் மேம்பாட்டு அலுவலர் கோட்டீஸ்வரி மற்றும், 80 விவசாயிகள் பங்கேற்றனர்.