சென்னை:அமெரிக்க வாழ் தமிழர் ஆதி கோபால், திருக்குறளின் 1,330 குறளையும், 'குறளுக்கோர் கீதம்' என்ற பெயரில் இசை தொகுப்பாக பாடி வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழரான ஆதி கோபால், 21, திருக்குறள் மீதான பற்றால், திருக்குறளின் 1,330 பாடலையும் இசை வடிவில் பாடியுள்ளார். இப்பாடல் தொகுப்பு, 'குறளுக்கோர் கீதம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.பாடலுக்கு கண்ணன் இசையமைத்துள்ளார்.
இப்பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் சமீபத்தில் நடந்தது. நீதிபதி ஆர்.மகாதேவன் இசைத் தொகுப்பை வெளியிட்டார். இயக்குனரும், நடிகருமான பாண்டிய ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆதி கோபால் கூறுகையில், ''திருவள்ளுவர் எழுதிய 1,330 குறளையும் இசை வடிவில் பாடலாக பாடியுள்ளேன்.
ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சவால்களை தாண்டி நல்லபடியாக முடிக்க முடிந்தது,'' என்றார்.ஆதி கோபாலின் தாய் மாலா கோபால் கூறுகையில், ''திருக்குறளை இசை வடிவாக தந்தால், இன்னும் பலருக்கு எளிமையாக போய் சேரும். இது எங்களின் பல நாள் கனவு; நனவாகியுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE