திறக்கப்படாத எம்.எல்.ஏ., அலுவலகம் வாயிலில் வியாபாரம் களைகட்டுகிறது

Added : ஜூன் 23, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
திருப்பூர் : திறக்கப்படாமலே இருக்கும் தெற்கு எம்.எல்.ஏ., அலுவலகம் பழங்கள் விற்பனை செய்யும் இடமாக மாறி விட்டது.திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் எதிரே அமைந்துள்ளது.இத்தொகுதி தோற்றுவிக்கப்பட்டு, முதல் எம்.எல்.ஏ.,வாக மா.கம்யூ., கட்சியைச் சேர்ந்த தங்கவேல் தேர்வானார். புதிய தொகுதி என்ற நிலையில், அப்போது எம்.எல்.ஏ.,வுக்கு தொகுதி
திறக்கப்படாத எம்.எல்.ஏ., அலுவலகம்  வாயிலில் வியாபாரம் களைகட்டுகிறது


திருப்பூர் : திறக்கப்படாமலே இருக்கும் தெற்கு எம்.எல்.ஏ., அலுவலகம் பழங்கள் விற்பனை
செய்யும் இடமாக மாறி விட்டது.திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் எதிரே அமைந்துள்ளது.இத்தொகுதி தோற்றுவிக்கப்பட்டு, முதல் எம்.எல்.ஏ.,வாக மா.கம்யூ., கட்சியைச் சேர்ந்த தங்கவேல் தேர்வானார். புதிய தொகுதி என்ற நிலையில், அப்போது எம்.எல்.ஏ.,வுக்கு தொகுதி அலுவலகம் இல்லை.தாராபுரம் ரோட்டில் இருந்த குடிநீர் தொட்டி வளாகத்தில் இருந்த ஒரு அறை அவரது அலுவலகமாகச் செயல்பட்டது.

அதன் பின், ஒரு வழியாக, வருவாய் துறை புறம்போக்கு நிலத்தைக் கண்டறிந்து, இந்த இடத்தில் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. தங்கவேல் தனது பதவிக் காலத்தில் இதை சிறிது காலம் பயன்படுத்தினார்.அடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., குணசேகரன் சிறிது காலம் அந்த அலுவலகத்தை 'சென்டிமென்ட்' காரணமாக பயன்படுத்தவில்லை. பின்னர் அங்கு சில மாற்றங்கள் செய்து அலுவலகத்தை அவர் பயன்படுத்தினார்.

கடந்தாண்டு நடந்த தேர்தலில் தி.மு.க., வைச் சேர்ந்த செல்வராஜ் வெற்றி பெற்றார். அவரும் இந்த அலுவலகத்தைப் பயன்படுத்தாமல் இருந்து வந்தார்.முன்னர் எம்.எல்.ஏ., வாக இருந்த இருவரும் இந்த அலுவலகத்தைப் பயன்படுத்தினர். இருவருமே அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடிய வில்லை.

இந்த 'சென்டிமென்ட்' காரணமாக தற்போதைய எம்.எல்.ஏ.,வும் இந்த அலுலகத்தைப் பயன்படுத்த தயங்குவதாக பேச்சு எழுந்தது.''கட்சி அலுவலகத்திேலயே பொதுமக்கள் தன்னைச் சந்தித்து விடுவதால் அந்த அலுவலகத்துக்கு குறிப்பிடும் வகையில் தேவை ஏற்படவில்லை'' என அவர் விளக்கம் அளித்தார்.அதன் பின், கொரோனா தடுப்பூசி முகாம்கள் அந்த வளாகத்தில் நடைபெற்றன. மற்றபடி அங்கு எந்த பயன்பாடும் இல்லை.இந்நிலையில் நீண்ட நாளாக அந்த அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. இதனால், அதன் வாசலில் வாகனங்களைக் கொண்டுவந்து நிறுத்தி சில வியாபாரிகள் பழங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-ஜூன்-202211:25:39 IST Report Abuse
Bhaskaran எல்லாம் கட்சியின். அல்லக்கைகள்
Rate this:
Cancel
undu urangi sezhitthu - ariyalur,இந்தியா
23-ஜூன்-202210:45:34 IST Report Abuse
undu urangi sezhitthu பகுத்தறிவு பகுத்தறிவு பல்லை இழிகுது
Rate this:
Cancel
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-202204:58:10 IST Report Abuse
ranjani கலெக்டர் அலுவலகம் எதிரில் இருப்பதால் TASMACற்கு கொடுத்து விடலாம். குடிமகன்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்று கலெக்டர் அறிந்துகொள்ள உதவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X