இந்தியாவின் நல்லுறவை மதிக்கிறோம்: அமெரிக்கா

Updated : ஜூன் 23, 2022 | Added : ஜூன் 23, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
வாஷிங்டன்-இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், மிக முக்கிய கூட்டாளியாக விளங்கும் இந்தியா உடனான நல்லுறவுக்கு என்றும் மதிப்பளிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதை மீறி, இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்-இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், மிக முக்கிய கூட்டாளியாக விளங்கும் இந்தியா உடனான நல்லுறவுக்கு என்றும் மதிப்பளிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.latest tamil newsகிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதை மீறி, இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்குகிறது. இதனால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில், சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி, ரஷ்யா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இது குறித்து, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பை கூறியதாவது:இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது. இந்தியா உடனான பரஸ்பர நல்லுறவுக்கு, அமெரிக்கா எப்போதும் மதிப்பளித்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மையை காப்பதிலும், சொந்த முடிவுகளை எடுப்பதிலும் சுதந்திரம் உள்ளது.


latest tamil newsஅதே சமயம், ரஷ்யா மீது சர்வதேச அளவில் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். ரஷ்ய அதிபர் புடின், தன் செயலுக்கு தக்க விளைவுகளை சந்திக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஜூன்-202217:20:24 IST Report Abuse
மலரின் மகள் தாலிபான்களிடம் பேரம்பேசி ஆப்கானில் நவீன ஆயுதங்களை விட்டு செல்லும்போது மிகப்பெரிய திட்டமோ சாதியோ இருப்பதாக பலர் சந்தேகம் கொண்டனர். ஆப்கானை விட்டு விட்டு வேறெங்கோ அமெரிக்கா யுத்தகளத்தில் மறைமுகமாக இறங்கப்போகிறது என்றும், வடகொரியா, தைவான் மூலம் சீனா என்று பேசினார்கள். உக்ரைன் உசுப்பப்பட்டு சின்னாபின்னமாக்கப்படும்போது பொருளாதாரத்தில் டாலர் வர்த்தகம் பெருமலாபமீட்டிக்கொள்ளலாம் என்றும் வெறும் மீடியாக்களை கொண்டு குழப்பிவிட்டு வெற்றிதோல்வியென்பதை தாங்கள் விரும்பியவண்ணம் எழுதி மற்றவர்களை நம்ப வைத்துவிடலாமென்று எண்ணியது பெரியண்ணன். ரஸ்யாவின் ரூபிள் வரலாறு காணாத வீழ்ச்சி என்று சொன்னபோது எழுதினோம், அதற்கான எதிர்வினைகளை ரசியா செய்து அது தகவமைத்து கொள்ளும்போது நிலைமை வேறாக இருக்கும் என்று. டாலருக்கான சிறப்புக்கள் மங்கத்தொடங்கி இருக்கின்றன. சவுதியானது சீனாவை நோக்கி சென்றுவிட்டது. இருதரப்பு வர்த்தகம் டாலர் மூலமில்லாமல் பனடமாற்று முறை நோக்கி செல்கிறது. அதுபோலவே ரசியா பரஸ்பர வர்த்தகத்தை கொள்வாரும் கொடுப்போரும் என்ற இரன்டு நாடுகளின் கரன்சிகளில் செய்கிறது. பணவீக்கம் இல்லாதா அமெரிக்காவில் அது பலமடங்கு அதிகரித்து அமெரிக்கர்கள் பணவீக்கத்தால் பட்டக்கடனுக்கு வட்டி கட்டுவது என்பதை முதலில் புரிந்து கொள்கிறார்கள். கடனுக்குத்தானே அங்கு அனைத்தும். வட்டி என்பதை கொடுக்கும்போது பொருள் உரிமையையாகும் காலம் கூடிக்கொண்டே செல்கிறது, உரிமையாகும்போது பொருளின் மதிப்பு அதிக அளவில் குறைந்து விடுகிறது. பிரிட்டன் தான்நிலையில் மிகவும் சரிந்து விட்டது. சூரியன் அஸ்தமனம் ஆகாது அவர்களின் அரசில் என்று சொன்னவரலாற்று ஆசிரியர்கள் முதலில் உதயம் ஆகிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கும் நிலை உருவாகிறது. தன்னை உலகின் பெரிய சக்தியாக காட்டிக்கொண்ட அமெரிக்கா, உலகின் பெரிய கடனாளி என்று உலகிற்கு தெரியவருகிறது. இவர்கள் நலிவடையும்போது மற்றதேசங்கள் தங்களை வேகமாக முன்னேற்றி கொள்ளும். தடை போடுவோர் தடுமாறிவீழ்தல் தான் தடையற்று முன்னேற்றம் இருக்கும்.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
23-ஜூன்-202216:24:19 IST Report Abuse
Samathuvan ......
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-202213:54:11 IST Report Abuse
Sankar Ramu அமெரிக்காவின் தவறுகளை யார் எப்போ கண்டிப்பார்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X