மறுபடியும் தீவிரம் அடைகிறது கொரோனா! 'மாஸ்க்' போடலேன்னா 'ரிஸ்க்'

Updated : ஜூன் 23, 2022 | Added : ஜூன் 23, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை : கோவையில் கொரோனா தொற்று, மீண்டும் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி, பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், மக்கள் அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று, மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று 55 பேருக்கு தொற்று ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக
Corona, Covid19, Corona Virus

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : கோவையில் கொரோனா தொற்று, மீண்டும் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி, பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், மக்கள் அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று, மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று 55 பேருக்கு தொற்று ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினமும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.பரிசோதனை அதிகரிப்பு


கடந்த சில நாட்களாக கோவை மாநகராட்சி, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்துார், சூலுார் போன்ற பகுதிகளில், வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.அதனால் மாவட்டத்தில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைகள் நாளொன்றுக்கு, 300 - 600 பேருக்கு எடுக்கப்பட்டு வந்தது. தற்போது, 1,500 - 2,200 பேர் வரை, பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நோய் பாதிப்பு அதிகரிப்பதால் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.'மாஸ்க்' அணிவது கட்டாயம்


பொதுக்கூட்டம், திருவிழா, திருமணம், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பள்ளி, கல்லுாரி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடித்து, 'மாஸ்க்' அணிய வேண்டும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா நோய் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், 'மாஸ்க்' அணியாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கும் நடைமுறை, மீண்டும் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது: மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்படும் நபர், அவரின் குடும்ப உறுப்பினர், அவருடன் தொடர்புடைய நபர்கள் என, அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.பொது இடங்களில் மக்கள் அனைவரும், சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிய வேண்டும். வரும் நாட்களில் முக கவசம் அணியாத நபர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். பஸ் ஸ்டாண்டுகளில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.


latest tamil news

தடுப்பூசி போடணும்


சமூக பரவலாக மாறாமல் தடுக்க, அதிகாரிகள் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 15 - 18 வயது பள்ளி குழந்தைகள் பலரும், தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இ.எஸ்.ஐ., மருத்துவமனையும் தயார்!

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், இ.எஸ்.ஐ., மருத்துவ மனையில் மாவட்ட கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார். தற்போது, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 750 படுக்கை, அரசு மருத்துவமனையில், 100 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் தயார் நிலையில் உள்ளது.அரசு, தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்தாலும், அங்கு அட்மிட் ஆகலாமா, வேண்டாமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆகவே, அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.முதல், இரண்டாவது அலைகளை அத்தனை எளிதில் மறந்து விட முடியுமா என்ன!
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
23-ஜூன்-202216:00:48 IST Report Abuse
Visu Iyer மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.///என்றால் மாஸ்க் அணிவதும் தடுப்பூசி போடுவதும் மக்கள் தானே தீர்மானிக்க வேண்டும். இதை ஏன் கட்டாய படுத்துகிறார்கள் என்று யாராவது கேட்க போறாங்க..
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
23-ஜூன்-202215:58:59 IST Report Abuse
Visu Iyer கோரனாவால் இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இப்போதாவது ஏற்பது செய்தால் நல்லது.. கிட்னி தேவை உலகம் முழுவதும் அதிகமாக உள்ளது
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
23-ஜூன்-202215:18:57 IST Report Abuse
தமிழன் இரண்டாவது அலையில், விடியலின் ஆட்சியில் ரெம்டெசிவர், மருந்து கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டு என்பதாயிரத்திற்கு விற்கப்பட்டதையும், பிணங்கள் டோக்கன் முறையில் எரியூட்டப்பட்டதயும், கொத்தடிமைகள் தங்கள் தலைவர் கொரோனாவை ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போல் அடக்கிவிட்டார் என்று பினாத்திக்கொண்டு திரிந்ததையும் எளிதில் மறந்து விட முடியுமா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X