சென்னை: பரபரப்பான சூழலில் அ.தி.மு.க., பொதுக்குழு இன்று சென்னை வானகரத்தில் கூடுகிறது. இதற்கென தொண்டர்கள் பலரும் கூடியுள்ளனர். அழைப்பு கொண்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கே அனுமதி அளிக்கப்படும். கோர்ட் உத்தரவுப்படி பொதுக்குழு நடக்கும் மண்டபத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் தொடுத்த அப்பீல் மனுவில் ஏற்கனவே பரிந்துரை செய்த தீரம்மானங்களையே நிறைவேற்ற வேண்டும் . வேறு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இது பழனிசாமி அணியினருக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது . ஒற்றைத்தலைமை மற்றும் பொதுசெயலர் என்ற கோஷம் இனி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது தொடர்பாக சட்டப்போராட்டம் தொடரலாம்.
பழனிசாமி, பன்னீர் செல்வத்திற்கு வரவேற்பு
முன்னதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அவரவர் வீட்டில் இருந்து வாகனங்கள் புடைசூழ புறப்பட்டு சென்றனர். அவர்களது ஆதரவாளர்கள் பல இடங்களில் வரவேற்பு அளித்தனர்.
கையெழுத்து போடாத உறுப்பினர்கள்

வழக்கமாக காரில் வரும் பன்னீர்செல்வம் இன்று பிரசார வாகனத்தில் சென்றார்.கையெழுத்திடாத பொதுக்குழு உறுப்பினர்கள். கூட்டத்தில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடுவது வழக்கம். ஆனால் இன்று பல உறுப்பினர்கள் தங்களின் வருகையை யாரும் பதியவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE