கர்நாடகாவில் மைசூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அழகிய சுற்றுலாத் தலம் கூர்க். குடகு (கொடகு) மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு இருக்கும் குளிர் காலநிலைக்காக, இதை "இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்றும் அழைப்படுகிறது. இந்தக் குடகு நாட்டில் உள்ள தலைக்காவேரி என்னும் இடத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது.
கூர்க் மலைப்பிரதேசத்தில் எங்கு திரும்பினாலும் பசுமையான காடுகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள், ரம்மியமான காபி மற்றும் தேயிலை தோட்டங்கள் என இயற்கை அழகுக் கொட்டி கிடக்கின்றது. சில்லென்று இங்கு வீசும் குளிர் காற்றை அனுபவிக்க ஒரு பேமிலி ட்ரிப்பிற்கு கண்டிப்பாக பிளான் பண்ணலாம், காண பல இடங்கள் உள்ளன.
ராஜா சீட்
![]()
|
ராஜா சீட் புகழ்பெற்ற வியூ பாய்ன்ட் ஆகும். மடிகேரி பஸ் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது மிக முக்கியச் சுற்றுலாத் தலம். மடிகேரியின் பிரபல சூரிய அஸ்தமனதைக் காணும் இடமாகும். அந்த காலத்தில் ராஜாகள் தங்கள் ராணிகளுடன் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து மகிழ்வார்களாம். அதனால் தான் ராஜா சீட் என பெயர் வந்தது.
ஓம்காரேஸ்வரா கோவில்
![]() Advertisement
|
சிவனுக்காக 1820 ஆம் ஆண்டு ராஜா லிங்கராஜேந்திராவால் கட்டப்பட்டது ஓம்காரேஸ்வரா கோவில் . இது மடிகேரியின் பாரம்பரிய சுற்றுலாத் தலமாகும். கோவில் கருவறையில் நீங்கள் காணும் லிங்கம் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டதாம்.
அபே நீர்வீழ்ச்சி
அபே நீர்வீழ்ச்சி குடகின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நடுவில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 70 மீட்டர் உயரத்திலிருந்து பாறைகளின் சரிவில் அருவியாய் வழிந்து, காவிரியுடன் கலக்கிறது. செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்கள் இங்குச் செல்லச் சிறந்த பருவகாலம் ஆகும்.
காவேரி நிசர்காதமா
காவிரி நிசர்காதமா என்பது காவிரி நதியில் அமைந்துள்ள தீவாகும். இது கூர்க்கில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று. அடர்ந்த மூங்கில் தோப்புகள், சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் நிறைந்தது. சுமார் 64 ஏக்கர் நிலப்பில் இந்தத் தீவு அமைந்துள்ளது. இந்தத் தீவை அடைய உதவும் தொங்கும் கயிற்றுப் பாலம் உங்களுக்கு ஒரு த்ரில் அனுபவம் தரும்.
துபாரே யானைகள் முகாம்:
![]()
|
கர்நாடக வனத்துறையின் பராமரிப்பில் துபாரே யானைகள் முகாம் உள்ளது. மைசூர் தசராவில் வலம் வரும் யானைகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு வந்தால் சுற்றுலா பயணியர், யானைகள் குளிப்பது, உண்பது, விளையாடுவது என அவை செய்யும் பல நடவடிக்கைகளை நேரில் கண்டு ரசிக்கலாம். காவேரி நிசர்காதமா அருகில் இந்த யானைகள் முகாம் அமைந்துள்ளது.
திபெத்திய தங்கக் கோயில்
![]()
|
மைசூர் மாவட்டத்தில் உள்ள பைலகுப்பேயில் உள்ள திபெத்திய மடலாயங்கள், திபெத்திய உணவகங்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான கடைகள் சுற்றுலா பயணியரை கவரும். இது பெங்களூரு - கூர்க் வழித்தடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் முக்கிய சுற்றுலாத்தலம், தங்கக்கோயில் , 'நம்ட்ரோலிங்' என்று அழைக்கப்படும் திபெத்திய புத்த துறவிகளின் மடாலயமாகும். இது முழுக்க முழுக்க திபெத்திய கட்டடக்கலைப் பாணியில் இருக்கும்.
தலைக்காவிரி
![]()
|
தலைக்காவிரி கொடகு மாவட்டத்தில் உள்ள, பாகமண்டலா கிராமத்தின் அருகில், பிரம்மகிரி மலைத்தொடரின் சரிவில், அமைந்துள்ளது. இது கர்நாடகாவின் புகழ் பெற்ற சுற்றுலா மற்றும் புனித யாத்திரைத் தலமாகும். தலைக்காவேரியில் காவேரி அம்மனுக்கு ஒரு கோவில் உள்ளது.
காபி தோட்டங்கள்:
இந்தியாவில் மிகப்பெரிய காபி உற்பத்தி செய்யும் மாவட்டம் கூர்க். அராபிக் மற்றும் ரோபஸ்டா எனும் காபி வகைகள் இங்குப் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. காபியைத் தவிரத் தேன், ஏலக்காய், மிளகு மற்றும் ஆரஞ்சு போன்றவையும் கூர்க் பகுதியின் விளைபொருட்களாக உள்ளன. உங்கள் ஷாப்பிங் லில்ஸ்ட்டில் இதை சேர்த்து கொள்ளலாம்.
இதோடு ட்ரக்கிங், கோல்ப், , பரிசல் சவாரி போன்ற பல பொழுது போக்கு அம்சங்களும் இங்கு நிறைந்துள்ளன். மறக்கமால் ஒரு ஜாலி ட்ரிப் போடுங்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE