விவசாயிகளிடம் இருந்து, 26 டன் கொப்பரையை, 28 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து, சேலம் வேளாண் துணை இயக்குனர் கண்ணன்(விற்பனை குழு) வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்னை விவசாயிகள் அரவை கொப்பரை தேங்காயை, மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம், மேச்சேரி, வாழப்பாடியில், ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் கொள்முதல் நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன. இங்கு அரவை கொப்பரைக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையாக, கிலோவுக்கு, 105.90 ரூபாய் வீதம், கடந்த பிப்ரவரி முதல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுவரை, 26.5 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வங்கி கணக்கில், 28.06 லட்சம் ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதனால் தென்னை சாகுபடி செய்துள்ள, சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜூலை, 31 வரை கொள்முதல் செய்யப்படும். விபரம் பெற, 0427 - 2906927 என்ற எண்ணில் அழைக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE