சென்னை: ஜூலை 11ல் நடைபெற உள்ள அடுத்த அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை முடிவு எட்டப்படும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு, ஒற்றை தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான வைத்திலிங்கம் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பொதுக்குழு முடிந்தபின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அனைவரின் விருப்பப்படி இன்று பொதுக்குழு நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் நிராகரிக்கப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த உறுப்பினர்களின் கருத்து. யாருமே அதனை ஏற்றுக்கொள்ளவில்லை; இதனால் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. தற்போதைய சூழ்நிலையில் ஒற்றைத் தலைமை தேவை, அந்த தீர்மானத்தை முதலில் கொண்டு வாருங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அடுத்த பொதுக்குழு தேதியினை இன்றே அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். அதனைதான் சி.வி.சண்முகம் மேடையிலேயே பிரதிபளித்தார். எனவே அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஜூலை 11ல் பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தார். அதில் ஒற்றை தலைமை முடிவு எட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சதிக்காரர்கள்
இதற்கிடையே அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறுகையில், ‛சட்டத்திற்கு புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டால் தான் புதிய பொதுக்குழுவுக்கான தேதி செல்லும். இதனால் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடத்த புதிதாக தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது. அதிமுக.,வை அழிவுப்பாதைக்கு சதிக்காரர்கள் கொண்டு செல்கின்றனர்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE