இபிஎஸ், ஓபிஎஸ்., உடன் அண்ணாமலை சந்திப்பு: விரிசலை ஒட்ட வைக்க முயற்சியா?

Updated : ஜூன் 23, 2022 | Added : ஜூன் 23, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
சென்னை: அதிமுக.,வில் ஒற்றை தலைமை பிரச்னையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்து பேசினர்.அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை பிரச்னையில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்ற சென்னை
இபிஎஸ், ஓபிஎஸ், அண்ணாமலை, அதிமுக, பாஜ, eps, ops,annamalai, bjp, admk

சென்னை: அதிமுக.,வில் ஒற்றை தலைமை பிரச்னையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்து பேசினர்.

அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை பிரச்னையில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இன்று நடந்த அதிமுக பொதுக்குழு நடந்தது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தாக்கல் செய்த 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. வரும் ஜூலை11ம் தேதி மீண்டும் ஒற்றை தலைமை தீர்மானத்துடன் பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டம் சட்டவிரோதமாக நடந்துள்ளதாக கூறி பொதுக்குழுவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். இதனால், அக்கட்சியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இச்சூழ்நிலையில், பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் தமிழக பா.ஜ., தலைவர் மற்றும் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்து பேசினர். முதலில், பழனிசாமியை அவரது இல்லத்திலும், பின்னர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திலும் சந்தித்தனர். ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு கேட்டு சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது.


latest tamil news



ஆனால், தற்போது அக்கட்சியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், பா.ஜ., நிர்வாகிகள் தனித்தனியே சந்தித்து பேசியது பல யூகங்களை கிளமப்பி உள்ளது. இருவரையும் ஒட்ட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக என கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே இந்த சந்திப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டு தான் இந்த சந்திப்பு நடந்தது. அதிமுக.,வின் உட்கட்சி பிரச்னையில் பா.ஜ., தலையிட்டது கிடையாது. ஜனாதிபதி தேர்தல குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-202206:24:03 IST Report Abuse
Mani . V .....
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
24-ஜூன்-202202:35:13 IST Report Abuse
BASKAR TETCHANA இந்து இடுக்கில் சைக்கிள் ஓட்டுபவன் இவன் தான். .எவன் எப்படி போனால் என்ன கிழவியை தூக்கி மனையில் உட்கார வை என்ற கதையாய் இருக்கிறது. இந்த அண்ணா தி.மு.க. பிரச்சனையில் பின்னால் பி.ஜெ.பி உள்ளது என்ற சந்தேகம் எழுகிறது. குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிற புத்தி அதிகம் பி.ஜெ.பியில்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-ஜூன்-202212:52:22 IST Report Abuse
Visu Iyerகுழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிற புத்தி அதிகம் பி.ஜெ.பியில்.///இவர்களை நம்பியா இந்தியாவை தருவது.. பாஜக இல்லாத பாரதம் படைப்போம் ஓர் அணியில் இருப்போம்...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-ஜூன்-202220:01:26 IST Report Abuse
Ramesh Sargam இந்த நிலையில், OPS டெல்லி பயணம் செல்லவிருக்கிறார் என்கிற செய்திவேற. அங்கு யாரை சந்திப்பார்? சோனியா வையா அல்லது மோடியையா....?
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-ஜூன்-202212:53:10 IST Report Abuse
Visu Iyer.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X