வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறியதாவது:
உயர்நீதிமன்ற உத்தரவின்படி 23 தீர்மானங்கள் தவிர்த்து புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது. இதையும் மீறி தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளதால், இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். தீர்மானங்களை ரத்து செய்ய இவர்களுக்கு உரிமை இல்லை. அவைத்தலைவர் தேர்வும் செல்லாது. அதிமுக அவைத்தலைவரை அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட பொது செயலாளராக இருந்த எம்.ஜி.ஆர்., அறிவித்தார். அதன் பிறகு, ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் அறிவிக்க வேண்டும். இது தான் அதிமுகவின் நடைமுறை. 23 தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே, பொது குழு உறுப்பினர்களும் ரத்து ஆகிவிட்டார்கள். அப்புறம் எப்படி அவைத்தலைவரை தேர்வு செய்ய முடியும். கூட்டு தலைமை குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார். இன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை. அரை மணி நேரத்தில் நடந்து முடிந்த ஓரங்க நாடகம். பேராசை, பதவி வெறி, சட்டத்தை மறந்துநீதிமன்றத்தை மறந்து அவர்கள் நடத்திய நாடகம் சர்வாதிகாரத்தின் உச்சிக்கு சென்று விட்டது.
பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவை தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஜூலை11ம் தேதி பொதுக்குழு கூட்டக் கூடாது.
கட்டுப்பாடு இல்லாத காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்துள்ளது. கட்சி நன்றாக இருக்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் கூட்டுத்தலைமை தான் கட்சி தலைமைக்கு நல்லது என்பது தான் ஒருங்கிணைப்பாளரின் விருப்பம்.
இதற்கு அவர்கள் ஒத்துவந்தால் ஒன்று சேர்ந்து கட்சியை நடத்துவோம் எதிர்காலத்தில் ஆட்சியயை பிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE