நவீன மார்க்கெட் திறக்கப்படாமல் ரூ.93 லட்சம் -வீணாகிறது; மீன்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றம்

Added : ஜூன் 23, 2022 | |
Advertisement
ராமநாதபுரம்,-ராமநாதபுரம் உழவர்சந்தை அருகே ரூ.93 லட்சம் செலவில் நவீனவசதிகளுடன் கட்டப்பட்ட மீன் மார்க்கெட் திறப்புவிழா நடந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டாக மூடப்பட்டுள்ளது. இதனால் மீன்வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். கட்டடமும் சேதமடைந்து நகராட்சி நிதி வீணாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. மார்க்கெட்டை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் உழவர்சந்தை அருகே ரூ.93 லட்சம் செலவில் நவீனவசதிகளுடன் கட்டப்பட்ட மீன் மார்க்கெட் திறப்புவிழா நடந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டாக மூடப்பட்டுள்ளது.

இதனால் மீன்வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். கட்டடமும் சேதமடைந்து நகராட்சி நிதி வீணாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. மார்க்கெட்டை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரத்தில் சாலைத்தெரு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது. சாலைத்தெருவில் மீன் மார்க்கெட் அருகிலேயே காய்கறிமார்க்கெட் செயல்படுவதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்

இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க நகராட்சி சார்பில் ரூ.93.39 லட்சம் செலவில் உழவர்சந்தை அருகே நவீன மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 54 கடைகள், வாகனங்கள்நிறுத்துமிடம், குடிநீர் வசதி, மீன்களை பாதுகாக்க குளிர்சாதன அறைகள் உள்ளன. இதனை 2021ல் ஒப்பந்த அடிப்படையில் தனியார்மூலம் ஜூலையில் திறக்கப்பட்டு மீன் விற்பனை நடந்தது. அதன்பின் எதிர்பார்த்த அளவிற்கு கடைகளில் மீன் விற்க வியாபாரிகள்வராத காரணத்தால் மார்க்கெட் மூடப்பட்டு ஓராண்டாக திறக்கப்படவில்லை.

பஸ் ஸ்டாண்ட் அருகே மீன் மார்க்கெட் உள்ளதால் திறந்திருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்து வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மீன் மார்க்கெட் சேதமடைந்து நகராட்சி நிதி வீணாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட வேண்டும்.

நகராட்சி தலைவர் கார்மேகம் (தி.மு.க.,) கூறுகையில், ''வியாபாரிகள் வரமறுப்பதால் திறக்கப்படாமல் உள்ளது. நகராட்சி நிதி இழப்பை தவிர்க்க அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். நவீன மீன் மார்க்கெட்டை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X