ஆசிரியரை களங்கப்படுத்திய நபர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிய வலியுறுத்தல்

Added : ஜூன் 23, 2022 | |
Advertisement
ராமநாதபுரம்,--ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு பள்ளி ஆசிரியர் கனகராஜ் மீதான பாலியல் குற்றம் பொய்யானது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகும் சிலர் அவரை சிலர் திட்டமிட்டு களங்கப்படுத்துகின்றனர். அவர்கள் மீது போலீசார் கிரிமினல் வழக்குப்பதிய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.இச்சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவர்

ராமநாதபுரம்,--ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு பள்ளி ஆசிரியர் கனகராஜ் மீதான பாலியல் குற்றம் பொய்யானது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகும் சிலர் அவரை சிலர் திட்டமிட்டு களங்கப்படுத்துகின்றனர். அவர்கள் மீது போலீசார் கிரிமினல் வழக்குப்பதிய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.இச்சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் முருகேசன் கூறியதாவது: வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக கனகராஜ் பணிபுரிகிறார். இதற்கு முன் வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த போது சிலரின் சூழ்ச்சியால், பொய்யான பாலியல் புகார் சுமத்தப்பட்டது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கனகராஜ் இடமாற்றம் செய்யப்பட்டார். தன்மீது சுமத்திய குற்றச்சாட்டு பொய் என ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் முறையிட்டார். விசாரணையில் கனகராஜ் மீது சுமத்திய புகார் பொய்யானவை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டது. தற்போது அவர் இப்பள்ளியில் பணிபுரிகிறார். அங்கு சிலர் திட்டமிட்டு, கனகராஜ் பணிக்கு வரக்கூடாது எனவும், மாணவர்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுத்து, மக்களிடம் அவதூறு பிரசாரம் செய்துஉள்ளனர்.ஆசிரியர், கல்வித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது போலீசார் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ---

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X