ஏலம் விட்ட நகைகளை குறைந்த விலைக்குவாங்கி தருவதாக கூறி ரூ.பல கோடி மோசடி| Dinamalar

ஏலம் விட்ட நகைகளை குறைந்த விலைக்குவாங்கி தருவதாக கூறி ரூ.பல கோடி மோசடி

Added : ஜூன் 23, 2022 | |
ராமநாதபுரம்,--தனியார் நிதி நிறுவனத்தில் ஏலம் விட்ட நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ராமநாதபுரம் மட்டுமின்றி பல மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வளர்மதி என்ற பெண் மீது ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் இரண்டாவது முறையாக நேற்று புகார் அளித்தனர்.அதில் கூறியிருப்பது: ராமநாதபுரம் மாவட்டம் காருகுடியை சேர்ந்த வளர்மதி என்பவர் தனது குடும்பத்தினருடன்



ராமநாதபுரம்,--தனியார் நிதி நிறுவனத்தில் ஏலம் விட்ட நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ராமநாதபுரம் மட்டுமின்றி பல மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வளர்மதி என்ற பெண் மீது ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் இரண்டாவது முறையாக நேற்று புகார் அளித்தனர்.அதில் கூறியிருப்பது: ராமநாதபுரம் மாவட்டம் காருகுடியை சேர்ந்த வளர்மதி என்பவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த பொதுமக்களிடம்தனது சகோதரி தனியார்நிதிநிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அங்கு ஏலம் விடப்படும் நகைகளை அவர் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.இதை நம்பி ஒவ்வொருவரும் ரூ.2 லட்சம் முதல் 30 லட்சம் வரை பணம் கொடுத்தோம். பணத்தை பெற்றவர் நகைகள் தராமல் ஏமாற்றிவிட்டார். கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். ராமநாதபுரம் சக்கரக்கோட்டை, மண்டபம், உச்சிப்புளி, பரமக்குடி, கமுதி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட ஊர்களில் 200க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார்.இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும், என கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X